வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பீதியில் இருக்கும் லைக்கா.. கட் அண்ட் ரைட் ஆக முடிவைச் சொன்ன சூப்பர் ஸ்டார்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து, அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் லேட்டஸ்ட் லுக் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கிறது

இந்த நிலையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஐடி ரைடில் சிக்கி தவிக்கிறது. இதனால் அடிக்கடி சூப்பர் ஸ்டாருக்கு போன் செய்து தொந்தரவு செய்திருக்கின்றனர். இதனால் அவர் கட் அண்ட் ரைட் ஆக தன்னுடைய முடிவை அவர்களிடம் சொல்லிவிட்டார்.

Also Read: குடித்தே சாவை தேடிக்கொண்ட 9 திரை பிரபலங்கள்.. ஒரு கோடி செலவு செய்து உயிர் தப்பிய ரஜினி

மேலும் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன் தயாரிக்க இருக்கிறார். இப்பொழுது லைக்கா கொஞ்சம் பிரச்சனையில் மாட்டியுள்ளது.

லைக்கா நிறுவனத்தினுடைய பணப்புழக்கங்களை எல்லாம் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அதனால் எங்கு ரஜினியின் 171-வது படம் தங்களது கையை விட்டு போய்விடுமோ என்ற பீதியில் லைக்கா நிறுவனம் தங்களது சூழ்நிலையை அவ்வப்போது சூப்பர் ஸ்டாருக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: கேஆர் விஜயா தயாரித்து லாபம் பார்த்த ஒரே படம்.. சூப்பர் ஸ்டாரால் கிடைத்த வெகுமதி

உடனே ரஜினி, ‘எல்லா பிரச்சினையும் முடித்து விட்டு வாருங்கள். அதுவரை பொறுமையாக இருக்கிறேன்’ என லைக்காவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏற்கனவே ரஜினி மற்றும் சுபாஷ்கரன் இருவரும் நல்ல ஒரு அண்ணன் தம்பி உறவில் இருந்து வருகின்றனர்.

ஆகையால் அவ்வளவு சீக்கிரம் ரஜினி தன்னுடைய படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் தூக்கிக் கொடுத்து விட மாட்டார். இந்த விஷயத்தில் லைக்கா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் அடிக்கடி சுபாஷ்கரன் உடன் போனில் பேசி ஆறுதல் கூறுவதுடன் தன்னுடைய முடிவிலும் உறுதியாக இருக்கிறார்.

Also Read: லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

Trending News