சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சந்தில் மாட்டிய எலியான லைக்கா.. பத்தாதுன்னு திரிஷாவும் சேர்ந்து படுத்தும் பாடு

Lyca production company stuck in big trouble: ‘எங்க இருந்து தான் நமக்குன்னும் வராங்கன்னு தெரியல’ என்பது தான் இப்போது லைக்காவின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. ஐடி ரைட், அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தாமதமானது எனத் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை லைக்கா சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்போது அஜித்தை வைத்து லைக்கா தயாரிக்கும் விடாமுயற்சி படமும் டிராப்பாகும் அளவுக்கு வந்தது.

ஆனால் லைக்கா சுபாஸ்கரன் விடாமுயற்சி படம் விரைவில் முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனா இப்போது ‘சந்தில் மாட்டிய எலி’ போல ஆனது லைக்கா நிறுவனத்தின் நிலை. விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது. வெளிநாடுகளில் ஷூட்டிங் என்றால் பட்ஜெட் தாறுமாறாக எகிறும். அதுவும் ஒரு நாளைக்கு விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு 50 லட்சம் செலவாகிறது.

இது பத்தாது என்று திரிஷாவும் நிறைய செலவை இழுத்து விடுவது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறார். அதனால் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறாராம். அதேபோல் தான் அஜித்தும் அப்பப்ப பிரேக் எடுத்துக் கொள்கிறார்.

Also Read: ஐகோர்ட்டில் விஷாலின் கோரிக்கையை ஏற்ற லைக்கா.. 5 வருடமா இழுத்தெடுத்த வழக்கு சுமூகமா முடியுமா.?

சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கும் லைக்கா

இதனால் செலவை சமாளிக்க முடியாமல் லைக்கா திணறுகிறது. அதோடு கேமரா மேன் நீரவ் ஷா படத்திலிருந்து விலகுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அஜித் அவர்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். ஆனால் படக்குழு நீரவ் ஷா-க்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அவர்களை ஏற்பாடு செய்தனர்.

அதற்கு அஜித் ஒத்துக்கொள்ள முடியாது என்கிறார். இதற்கு முன்பு அஜித்தின் கிரீடம், பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்கு நீரவ் ஷா தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதால், விடாமுயற்சி படத்திலும் அவர் இருக்க வேண்டும் என அஜித் விரும்புகிறார். இதையெல்லாம் எப்படி சமாளிப்பது, பட்ஜெட்டும் தாறுமாறாக எகிறுகிறதே என இப்போது லைக்கா தலையை பிச்சுக்கிட்டு இருக்குது.

Also Read: அஜித்தின் சம்பளத்தை கொடுத்த பிரபல ஓடிடி.. லைக்கா பாரத்தை குறைத்த நிறுவனம்

Trending News