தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கும் படத்தின் பட்ஜெட் கோடிக்கணக்கில் தான் இருக்கும் அதனால் சிறு சிறு தயாரிப்பாளர்கள் ஷங்கர் படத்தை தயாரிக்க முன்வரமாட்டார்கள்.
ஆனால் பெரிய தயாரிப்பாளர்கள் ஷங்கர் படத்தை மட்டும் தயாரிக்க முன்வருவார்கள். அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் 400 கோடியாக இருந்தால் படத்தின் வருமானம் 800 கோடியாக இருக்கும்.
அதனாலேயே பெரிய தயாரிப்பாளர்கள் சிறு தயாரிப்பாளர்கள் போல் வருடத்திற்கு 10 படம் எடுக்காமல், சங்கர் போல் ஒரு மனிதனை வைத்து ஒரு படத்திலேயே கோடிக்கணக்கில் வசூலை எடுத்துவிடுவார்கள்.
இந்தியன்2 படத்தை முதலில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் லைக்கா நிறுவனம் இப்படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என முன்வந்து கோடிக்கணக்கில் பணத்தை போட்டனர்.
ஆனால் ஷங்கர் இந்தியன் 2 படத்தை நிறுத்திவிட்டு ஹிந்தியில் அந்நியன் 2 படத்தை எடுப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் கோபமடைந்த லைக்கா நீதிமன்றத்தில் ஷங்கர் மீது புகார் அளித்தது.
அதற்கு ஷங்கர் இன்று நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நேரத்தில் படம் முடியாமல் போனதற்கு காரணம் முழு ஊரடங்கு, படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் லைகா நிறுவனம் படத்தை சீக்கிரமாக முடிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுமட்டுமில்லாமல் இவர்களால் ஒரு வருடம் எந்த படத்தை இயக்காமல் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.