வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சம்பந்தமே இல்லாமல் லைனப்பில் வந்த இயக்குனர்.. ஆஹா புது உருட்டால் ஏகே-62 வந்த சோதனை!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய 62 வது படத்தின் வேலைகளில் பரபரப்பாக இறங்கி இருக்கிறார். துணிவு படப்பிடிப்பின் போது அவருடைய 62 வது படத்தை இயக்கப் போவது விக்னேஷ் சிவன் என்றும், இசையமைப்பாளர் அனிருத் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து ஏகே 62 படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில் லைக்கா மும்முரமாக இறங்கி இருக்கிறது. விக்னேஷ் சிவன் வெளியேறிய நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி தான் இந்த படத்தை இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இயக்குனர் மகிழ் திருமேனியும் இப்போது இந்த படத்தை இயக்கப் போவது இல்லை.

Also Read: விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு

நடிகர் அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக பார்க்கப்படும் இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் வரலாறு திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மற்றொரு பக்கத்தை ரசிகர்களுக்கு காட்டிய இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இருவருக்கும் லைக்கா நிறுவனம் வலை விரித்து பார்த்தது. ஆனால் அதுவும் செட் ஆகவில்லை.

மேலும் அஜித்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபுவையும் அணுகியது லைக்கா. அந்த திட்டமும் வேலைக்கு ஆகாமல் போனது. இதற்கு இடையில் தற்போது இந்த இயக்குனர்கள் லிஸ்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான்காவதாக இன்னொரு இயக்குனரும் இணைந்திருக்கிறார்.

Also Read: தியேட்டரில் மட்டும் இல்லாமல், எல்லா இடத்திலும் பட்டையை கிளப்பும் துணிவு.. ரெக்கார்ட் பிரேக் செய்த டார்க் டெவில் அஜித்

ஏ கே 62 படத்தின் இயக்குனர்கள் லிஸ்டில் நான்காவதாக இணைந்திருப்பவர் தான் இயக்குனர் முத்தையா. கொம்பன், தேவராட்டம், விருமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தான் இவர். தற்போது லைக்கா பட நிறுவனம் இயக்குனர் முத்தையாவையும் அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் முத்தையாவை பொறுத்த வரைக்கும் அவருடைய படங்கள் ஒரே சாயலில் தான் இருக்கும். தென் தமிழகத்தை மையமாகக் கொண்ட கிராமத்து கதைகளை தான் இவர் இயக்கியிருக்கிறார். கிராமத்து கதையாக இருந்தாலும் அஜித்துக்கு பிடித்துப் போனால் ஓகே சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தில் லைக்கா முத்தையாவுக்கு தூது விட்டு இருக்கிறது.

Also Read: லண்டனில் இருந்து வெளிவரும் ஏகே-62 அப்டேட்.. லியோவால் பதுங்கிய அஜித் பாயும் நேரம் இது

Trending News