செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூப்பர் ஹிட் இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லைக்கா.. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி

Lyca, Vijay Sethupathi: பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் இவர்களது தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் நல்ல வசூலை பெற்றது. இப்போது கைவசம் இந்தியன் 2, லால் சலாம் போன்ற படங்களை லைக்கா நிறுவனம் வைத்துள்ளது.

மேலும் அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அமலாக்க துறையினர் லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதனால் லைக்கா முடங்கியது, இனி அவரது தயாரிப்பில் எந்த படமும் வெளியாவது கடினம் என்று கூறப்பட்டு வந்தது.

Also Read : மீண்டும் சிக்கலில் தவிக்கும் விடாமுயற்சி.. எல்லா ரூட்டிலும் யோசித்து திக்கு முக்காடும் லைக்கா

ஆனால் லைக்கா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் ஒருவரை லாக் செய்து உள்ளனர். அதாவது சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 2018 படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. கேரளா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டதை கண்முன்னே இயக்குனர் ஜூடெ அந்தனி ஜோசப் காட்டி இருப்பார்.

இந்நிலையில் இந்த இயக்குனர் லைக்கா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான கையெழுத்தும் போடப்பட்டு இருக்கிறது. அதுவும் இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் எடுக்கப்பட இருக்கிறார்களாம். இதற்காக விஜய் சேதுபதி இடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

Also Read : ஹீரோவைவிட வில்லன்களை பெரிதும் பேசப்பட்ட 5 படங்கள்.. கடைசி வரை நின்று அடித்த விஜய் சேதுபதி

ஏற்கனவே விக்ரம் வேதா போன்ற பல படங்களில் விஜய் சேதுபதி டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் இணைந்து மலையாள நடிகர் நிவின் பாலி இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முதல் முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

2018 படத்தின் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களையும் ஜூடெ அந்தனி ஜோசப் கவர்ந்து இழுத்தார். இவருடைய அடுத்த படத்தை தயாரிக்க பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்த நிலையில் சரியான நேரத்தில் லைக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கிறது. மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

Also Read : வெளிநாட்டில் செட்டில், ரஜினி கூப்பிட்டும் மறுத்த நண்பன்.. விஜய் சேதுபதிக்காக நடித்துக் கொடுத்த ஒரே படம்

Trending News