வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

காலை சுத்துன பாம்பாக டார்ச்சர் பண்ணும் விடாமுயற்சி.. சூப்பர் ஸ்டாரை மலைபோல் நம்பும் லைக்கா

Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் லைக்காவை காணோம் என அறிவிப்பு கொடுத்து அட்ராசிட்டியும் செய்து வருகின்றனர். ஆனால் விடாமுயற்சியால் தயாரிப்பாளரின் பாடு இப்போது திண்டாட்டமாக இருக்கிறதாம்.

கால சுத்தின பாம்பாக டார்ச்சர் பண்ணும் இப்படத்தை முடித்து ரிலீஸ் பண்ணினால் போதும் என்ற எண்ணம் தான் லைக்காவுக்கு இப்போது இருக்கிறது. ஆனாலும் இதுக்கு மேல எங்களால் முடியாது நிறுத்துங்க என படகுழுவுக்கு அவர்கள் ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷனே போட்டு விட்டார்களாம்.

ஏனென்றால் விடாமுயற்சி படத்திற்காக லைக்கா போட்ட பட்ஜெட்டை தாண்டி செலவு செய்து விட்டார்கள். ஆனாலும் சூட்டிங் முடிந்த பாடில்லை. இதற்கு மேலும் செலவு செய்ய முடியாது என்ற காரணத்தினால் தற்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்த சொல்லி இருக்கிறார்களாம்.

Also read: நெட்டிசன்களால் பங்கமாய் கலாய்க்கப்படும் ரஜினி.. அம்பானி வீட்டு விருந்தினால் மதி மயங்கிய சூப்பர் ஸ்டார்

அதுவரை டப்பிங் மற்றும் எக்ஸ்ட்ரா வேலைகளை பார்க்கும்படி உத்தரவு வந்திருக்கிறது. இந்த கேப்பில் ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்து வியாபாரம் செய்யும் திட்டத்தில் தயாரிப்பாளர் இருக்கிறார். அதன் மூலம் வரும் பணத்தை வைத்து விடாமுயற்சியை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு உள்ளது.

ஏற்கனவே வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்த போது கிளைமேட் சரி இல்லை அது இது என்று ஏகப்பட்ட பணம் செலவாகி இருக்கிறது. அதனால் கூட லைக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்கின்றனர். ஆனாலும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

ஏனென்றால் இப்போது அஜித்தை பற்றிய நெகட்டிவ் செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது அதனாலயே இப்படி ஒரு கதையை யாரும் கட்டி விட்டார்களா என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குமுறி வருகின்றனர். எது எப்படியோ படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் வெளிப்படையான கதறலாக உள்ளது.
.
Also read: லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து கமுக்கமாக உதவி செய்த ரஜினி.. நன்றி மறவாமல் குலசாமியாக வழிபடும் 2 நடிகர்கள்

Trending News