திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லைக்கா தயாரிப்பில் 2000 கோடிக்கு மேல் முதலீட்டில் வரிசையாக 11 படங்கள்.. விஜய் மகனையும் லாக் செய்த புத்திசாலித்தனம்

Lyca Productions Movies List: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி தயாரிப்பு நிறுவனம்தான் லைக்கா புரொடக்ஷன்ஸ். தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் 2000 கோடிக்கு மேல் முதலீடு செய்து வரிசையாக 11 படங்களை பிரம்மாண்டமாக  தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் வரிசையாக ரிலீஸ் ஆகி லைக்கா நிறுவனத்தின் கஜானாவையும் நிரப்ப போகிறது.

அதிலும் குறிப்பாக  விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு  இயக்குனராக அறிமுகமாகும் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கியது. இந்த படம் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கப் போகிறது.

Also Read: தளபதி 68ல் விஜய் நடிக்கப் போகும் கேரக்டர் இதுதான்.. நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் தயாராகும் சம்பவம்

அதுமட்டுமல்ல ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து முடித்திருக்கும் இந்தியன் 2 படத்தையும் லைக்கா தான் தயாரித்தது. இந்த படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படமும் லைக்கா தயாரிப்பில் தான்  உருவாகப் போகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில்  துவங்க உள்ளனர்.

மேலும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ‘மொய்தீன் பாய்’ என்ற கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

இதன் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி வாசு இயக்கிக் கொண்டிருக்கும் சந்திரமுகி 2 படத்தையும் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.

ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தையும், அதன் தொடர்ச்சியாக லக்ஷ்மணன் மற்றும் நிகில் குமார் படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது. மேலும் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன்( Mission Chapter1) படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்  லைக்கா நிறுவனம்  புதிதாக தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் சாய் பல்லவியை கதாநாயகியாக ஒப்பந்தம்  செய்துள்ளது.

Also Read: ஜெயிலர் வசூலை சரிக்க திட்டம்.. செப்டம்பர் ஒன்றை குறிவைத்து வெளிவரும் 6 படங்கள்

இவ்வாறு ஒட்டுமொத்தமாக 11 படங்களை வரிசையாக பெரும் முதலீட்டில் தயாரித்து கோடிக்கணக்கில் அதிக லாபம் பார்க்க வேண்டும் என லைக்கா ப்ரொடக்சன்ஸ் வியாபாரம் வலையை விரித்து இருக்கிறது. அதிலும் விஜய்யின் மகன் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் புதிய படத்தையும் புத்திசாலித்தனமாக லாக் செய்துள்ளது.

Trending News