புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

லைகா அண்ட் ஷங்கர் இருவரிடையே முத்திய பகைப்போர்.. ரெட் ஜெயன்ட் இருந்தும் பஞ்சாயத்தில் கிடைக்காத நியாயம்

இந்தியன் 2 பட பிரச்சனையால் ஷங்கர் மற்றும் லைக்கா இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பேச்சுவார்த்தை இன்றி இருக்கிறார்கள். இப்பொழுது லைக்கா நிறுவனம் இந்தியன் 3 படத்தை OTT யில் வெளியிடுவதா அல்லது தியேட்டரில் ரிலீஸ் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஷங்கர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் 2025 பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதில் தான் இப்பொழுது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அந்த படத்தை வெளியிட முடியாத நிலைமை ஏற்படுவது போல் பிரச்சனைகள் கிளம்பி உள்ளது..

லைகா இப்பொழுது கவுன்சில் மூலமாக ஷங்கருக்கு ரெட் கார்டு போடும் நடவடிக்கையை எடுத்துள்ளது. ஷங்கர் இயக்கிய இந்தியன் 3 படம் முழுவதுமாக முடியவில்லை. இப்பொழுது அதை சீர்படுத்துவதற்கு அவர் தரப்பிலிருந்து மேலும் 80 கோடிகள் வரை லைக்காவிடம் கேட்கிறார்கள். அதில் ஷங்கரின் சம்பளம் 30 கோடிகளும் அடங்கும் .

லைகா தரப்போ, இரண்டாம் பாகத்தில் எங்களுக்கு இவ்வளவு கோடிகள் நஷ்டம் ஆகிவிட்டது. அதனால் இந்தப் படத்திற்கான மேக்கிங் செலவை மற்றும் தருகிறோம், நீங்கள் உங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுத்து படத்தை எங்களுக்கு முடித்து தாருங்கள் என வாதம் செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் இந்தியன் மூன்றாம் பாகத்தை எடுத்த வரைக்கு எங்களுக்கு போட்டு காட்டுங்கள் என லைகா ஷங்கரிடம் கேட்டுள்ளது. அதற்கும் மறுப்பு தெரிவித்த ஷங்கரால் லைக்கா இந்த பிரச்சனையை கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லுள்ளது.

ஷங்கரோ, ஆரம்பத்தில் இந்த படம் ட்ராப்பான பின் ரெட் ஜெயன்ட் மூலம் மீண்டும் தொடங்கப்படும் போது முறையாக சம்பளம், பட்ஜெட் என அனைத்தையும் போட்டுவிட்டு இப்பொழுது இப்படி செய்வது நியாயம் இல்லை என லைகா மீது பதில் புகார் கூறி வருகிறார்.

Trending News