திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்திடம் ஓவர் கறார் காட்டும் லைக்கா.. பிள்ளை பெறுவதற்கு முன் பேர் வைத்தால் கதி இதுதான்

Vidamuyarchi – Ajithkumar: நடிகர் அஜித்குமாருக்கு வலிமை படத்தை விட மோசமான அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது விடாமுயற்சி. வலிமை படமாவது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை என்று அவருடைய ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். ஆனால் விடாமுயற்சியும், படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறது.

இப்படி இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு, படம் டிராப் ஆகிவிட்டது என்று சொன்னால் கூட நிம்மதி தான் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் அதை கண்டு கொள்ளாமல் அவருடைய வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்போது தான் பட குழு லொகேஷன் பார்ப்பதற்கு அபுதாபிக்கு சென்று இருக்கிறார்கள்.

Also Read: இழுபறியில் லைக்காவின் விடாமுயற்சி.. பெரும் தலைவலியால் சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம்

இந்தப் படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் எப்போதும் ஹீரோக்களிடம் நல்ல உறவை வைத்துக் கொள்வார்கள். ஆனால் விடாமுயற்சியின் படத்திற்காக அஜித்தின் சம்பள விஷயத்தில் மட்டும் ரொம்பவும் கறார் காட்டி வருகிறார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு அஜித் பேசி இருக்கும் சம்பளம் 105 கோடி. நடிகர் அஜித்துமே அவருடைய சம்பள விஷயத்தில் எப்போதுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள மாட்டார்.

படத்தின் ஒப்பந்தம் முடிந்ததும் முதலில் 25 கோடி அட்வான்ஸ் ஆக வாங்கிக் கொள்வார் அஜித். அதன் பின்னர் மாதா மாதம் அவருடைய அக்கவுண்டில் 5 கோடி போட்டு விட வேண்டும். இதுதான் எப்போதுமே அவர் பாலோ செய்யும் சம்பள டீல் . ஆனால் இப்போது மூன்று மாதமாக அஜித் அக்கவுண்டில் 5 கோடி போடவில்லையாம் லைக்கா.

Also Read: தயாரிப்பாளர்கள் வலி தெரிந்து நடந்து கொள்ளும் அஜித்.. எல்லா படத்துக்கும் இதே நிலைமைதான்னா எப்படி பாஸ்

படத்தின் படப்பிடிப்பு வேலைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. செய்யாத வேலைக்கு எதற்கு சம்பளம் என யோசித்து விட்டார்கள் போல. இதனால் அட்வான்ஸ் கொடுத்ததோடு லைக்காவுக்கும், அஜித்திற்கும் இருந்த கணக்கு வழக்கு அப்படியே நிலுவையில் இருக்கிறது. இனி படப்பிடிப்பு ஆரம்பித்தால் தான் மீதி தொகையை கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

இந்த படத்தால் செம காண்டில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இதற்கு விக்னேஷ் சிவன் படம் எடுத்திருந்தால் கூட இந்நேரம் ரிலீஸ் ஆகி இருக்கும் என தங்களுடைய ஆத்திரத்தை குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பெறாத பிள்ளைக்கு பெயர் வைத்த கதையாய் ஆகிவிட்டது விடாமுயற்சி படத்தின் நிலைமை.

Also Read: அஜித் எங்களுக்கு மருமகனே இல்ல.. 23 வருடங்கள் கழித்து வாய் திறந்த ஷாலினியின் அப்பா!

Trending News