சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

4 வாரிசுகளை வைத்து பிள்ளையார் சுழி போட்ட லைக்கா.. அதிரடியாக தொடங்கும் ஜேசன் சஞ்சய் கனவு படம்

Jason Sanjay: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு சிறு வயது முதலே சினிமாவில் மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் நடிப்பில் இருக்கும் ஆர்வத்தை விட இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்று லட்சியம் தான் கனவாக மாறி இருக்கிறது. அதனால் படிக்கும் பொழுதே சில குறும்படங்களை எடுத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து இயக்குனராக பயணிக்க வேண்டும் என்றால் அதற்கான படிப்பையும் படிக்க வேண்டும் என்று வெளிநாட்டிற்கு சென்று சினிமா மேக்கிங் படிப்பை படித்து முடித்துவிட்டு படத்தை இயக்குவதற்கு தயாராகி இருக்கிறார். அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் படத்தை தயாரிக்கப் போவதாக கடந்த வருடமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

4 வாரிசுகளை தட்டி தூக்கிய லைக்கா நிறுவனம்

ஆனால் அறிவிப்பு வந்த பிறகும் எந்தவித அப்டேட் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதாக இருந்தது. அதற்கு காரணம் விஜய் முழுமையாக சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் ஜேசன் சஞ்சய் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தார்.

தற்போது காத்திருந்ததுக்கு பலனாக ஜேசன் சஞ்சய் படத்தை இயக்குவதற்கு விஜய் சம்மதத்தை கொடுத்துவிட்டு எடுத்து வைக்கும் முயற்சியில் வெற்றியை பெற வேண்டும். அதற்காக கடைசி வரை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய், லைக்கா கூட்டணி சேர்ந்து புதுப்படத்திற்கு பிள்ளையார் சுழி போட போகிறார்கள். ஆனால் ஏற்கனவே இதில் ஹீரோவாக கவின் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது கவினுக்கு பதிலாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர் நடிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்துக்கு ஏஆர் ரகுமானின் மகன் ஏஆர் அமின் இசையமைக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் இப்படம் முழுக்க முழுக்க வாரிசுகளுக்கான படம் என்பதையும் இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் உறுதியாகிவிட்டது. அந்த வகையில் இவர்களை வைத்து லைக்கா ஆடப்போகும் ஆட்டம் நிச்சயம் வெற்றியை கொடுக்கப் போகிறது.

சம்பவம் செய்ய காத்திருக்கும் கோட் படம்

- Advertisement -

Trending News