வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பஞ்சாயத்தில் தீர்ப்பு கிடைக்காமல் திணறும் விடாமுயற்சி.. லைகாக்கு வந்த இடியாப்ப சிக்கல்

விடாமுயற்சி படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் டிரைலர் இன்னும் வெளிவரவில்லை. ஏற்கனவே கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது ஜனவரி 1ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் 27ஆம் தேதி வெளி வருகிறது, இப்பொழுது இந்தப் படம் பெரிய சிக்கலில் இருக்கிறது. விடாமுயற்சி1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான “பிரேக் டவுன்” படத்தின் தழுவல்.

ஹாலிவுட் பெரமவுண்ட் பிக்சர்ஸ் இப்பொழுது இந்த படத்திற்கு எதிராக உரிமை கோரி வருகிறது. முறையாக அனுமதி பெறாமல் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து விட்டனர் என நஷ்ட ஈடு கேட்டு உள்ளது. ஆரம்பத்தில் 150 கோடிகள் வரை இதற்கு கொடுக்க வேண்டும் என தர்க்கம் செய்துள்ளது.

ஆரம்பத்தில் அஜித் கால் சீட்டு இருக்கிறது என லைகா தரப்பு தான் இந்த கதையை எடுக்குமாறு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது இந்த படத்தை வெளியிடுவதில் பெரிய சிக்கல் நிலவி வருகிறது. பெரமவுண்ட் பிக்சர்ஸ் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

30 கோடிகள் வரை நஷ்ட ஈடு கொடுப்பதாக லைகா தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் இந்த பிரச்சனைகள் ஓய்ந்த பிறகு தான் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்களுக்குள் இந்த பிரச்சனையை முடித்து தருமாறு ஆட்களை அனுப்பி இருக்கிறது லைகா.

Trending News