திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

Shankar : ஷங்கரை பார்க்க கூட முடியாமல் தர்ம சங்கடத்தில் லைக்கா.. ஒரே வருடத்தில் விழுந்த மரண அடி

சன் பிக்சர்ஸுக்கு இணையாக ஒரு நிறுவனம் இருந்தது என்றால் அது லைக்கா தான்‌. இப்போது கைவசம் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களை கையில் வைத்துள்ளது. இந்த படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட்டில் தான் உருவாகி வருகிறது.

ஆனால் இப்போது பழையபடி லைக்கா நிறுவனம் இல்லை. மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி கொண்டிருக்கிறது. கடைசியாக இந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.

இதனால் லைக்கா தயாரிக்கும் படங்கள் எல்லாமே இப்போது பாதியில் நிற்கிறது. இந்த நிலைமை எப்போது மாறும் என்று லைக்கா சுபாஸ்கரன் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ஷங்கர் வீட்டு திருமணத்திற்கு வராத லைக்கா சுபாஸ்கரன்

இதில் ராம்சரண் குடும்பம், அட்லி, நயன்தாரா, சிவகார்த்திகேயன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். லைக்கா சுபாஸ்கரன் மட்டும் வரவில்லையாம். ஏனென்றால் இந்த படப்பிடிப்பு பாதியில் நிற்கும் நிலையில் அவரை பார்த்தால் தர்ம சங்கடம் ஏற்படும் என்பதால் இதை தவிர்த்து உள்ளார்.

மேலும் பெரிய நிகழ்ச்சிகளை சுபாஸ்கரன் இப்போது தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவழியாக இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து வெளியிட்டால் கண்டிப்பாக பெரும் லாபத்தை இந்நிறுவனம் பெற்று விடலாம்.

ஆனால் ஜூன் மாதம் இந்தியன் 2 வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இப்போது இதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரே வருடத்தில் லைக்காவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.

Trending News