வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமல் விட்டுக் கொடுப்பாரான்னு தேவுடு காக்கும் லைகா.. சட்ட சிக்கலில் ஷங்கர்

இந்தியன் 2 படத்தால் சங்கரின் பெயர் டேமேஜ் ஆனது. இப்படி ஒரு மோசமான படம், சங்கர் படமா என அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தது. இந்தியன் படத்தால் இரண்டாம் பாகத்திற்கு கடும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த படம் வெளிவந்து மோசமான விமர்சனங்களை பெற்றது.

இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்கும் பொழுது அந்த படத்தின் மூன்றாம் பாகமும் வெளிவரும் என கூறியிருந்தனர். அதற்கேற்றார் போல் மூன்றாம் பாகத்தில் காட்சிகளையும் இரண்டாம் பாகம் எடுக்கும் பொழுதே ஒருசேர எடுத்து முடித்து விட்டனர். சின்ன சின்ன வேலைகள் மட்டும் மீதம் இருந்தது.

இந்தியன் இரண்டாம் பாகம் ப்ளாப் ஆகி கிடைத்த மோசமான விமர்சனத்தால் இப்பொழுது தயாரிப்பாளர் லைகா தரப்பு இந்த படத்தை ஓ டி டியில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. ஆனால் கமல் போல் ஒரு உச்ச நட்சத்திரம் இதற்கு ஒத்துக்கொள்ளுவாரா என்று தெரியவில்லை.

மணிரத்தினத்தின் தக் லைஃப் படத்தை வைத்து இந்தியன் மூன்றாம் பாகத்தை எப்படியும் நல்ல பிசினஸ் செய்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்த கமலுக்கு இப்பொழுது பூதாகரமாய் பிரச்சனை கிளம்பியுள்ளது. ஏற்கனவே கமல் இந்தியன் மூன்றாம் பாகத்துக்கு ஒரு மாதம் வேலை இருக்கிறது என சொல்லிக் கொண்டிருந்தார்.

கமலும், ஷங்கரும் இதற்கு நிச்சயமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் லைக்கா தரப்பு விடாப்பிடியாய் இந்த படத்தை நம்பாமல் ஓடிடி என கூறிக் கொண்டிருக்கிறது. கமல் இந்த படத்திற்கு இன்னும் டப்பிங் பேசி முடிக்கவில்லை. சங்கரும் ஒரு மாதம் வேலையை பாக்கி வைத்திருக்கிறார். இப்படி இழுபறியில் இருக்கிறது லைகா நிறுவனம்.

Trending News