Indian 2: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கிட்டத்தட்ட 5 வருடமாக உருவாகின படம் தான் இந்தியன் 2. ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தத்தளித்து வந்தது. ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் ஓய்ந்தபின் வருகிற ஜூன் 13 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இதில் கமல், சேனாதிபதி மற்றும் இந்தியன் தாத்தாவாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் சித்தார்த், காஜல் அகர்வா, ராகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா, பாபி சிம்மா, ப்ரியா பவானி, சமுத்திரக்கனி இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் மறைந்த நடிகரான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைக்கா நிறுவனம் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது.
விட்டதை பிடிக்க லைக்கா போட்ட திட்டம்
ஏற்கனவே லைக்கா நிறுவனம் ரஜினியின் வேட்டையன், அஜித்துக்கு விடாமுயற்சி என்று இரண்டு பெரிய படங்களை தயாரித்து வருகிறது. இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கும் பணத்தை வாரி இறைத்திருக்கிறது. இதனால் இடைப்பட்ட நேரத்தில் பண நெருக்கடியால் ரொம்பவே கஷ்டத்திற்கு ஆளானார்.
ஆனாலும் அதையெல்லாம் பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளாமல் இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்சை மிகப் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறார். அந்த வகையில் வருகிற மே மாதத்தில் 16ஆம் தேதி நேரு ஸ்டூடியோவில் வைத்து ஆடியோ லான்ச் பெரிய அளவில் நடத்துவதற்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
இதெல்லாம் பண்ணுவதற்கு காரணம் கோடிக்கணக்கான பணத்தை போட்டு படத்தை எப்படியோ எடுத்து முடித்து விட்டாச்சு. இனி மொத்த லாபமும் படத்தை ரிலீஸ் பண்ணி வசூலில் தான் எடுக்க முடியும். அதற்கு பிரமோஷன் பெரிய அளவில் நடந்தால் மட்டும் தான் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.
இதனால் தான் விட்டதை பிடிக்கும் வகையில் ஆடியோ லாஞ்சுக்கு என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. இந்தியன் 2 வசூலில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக லைக்கா நிறுவனம் ரொம்பவே மெனக்கெடு செய்து வருகிறது.