திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீ பேசுனது எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாத்தியா? பார்த்திபனால் படாத பாடுபடும் லைக்கா

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் எந்த விஷயமாக இருந்தாலுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். இந்நிலையில் சில நேரங்களில் ஏடாகூடமாக பேசி சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார். மேலும் இரவின் நிழல் ஆடியோ லாஞ்சில் மைக் வேலை செய்யாததால் கீழே தூக்கி எறிந்தது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.

இவ்வாறு பார்த்திபனை சுற்றி நிறைய சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது லைக்கா ரெய்டுக்கும் இவர்தான் காரணம் என்பது போல ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இதில் பார்த்திபனும் நடித்திருந்தார்.

Also Read : இரவின் நிழலால் மனம் நொந்து போன பார்த்திபன்.. வெறுத்து போய் எடுத்திருக்கும் முடிவு

மேலும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா சுபாஸ்கரன் தயாரித்திருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் விழாவில் பார்த்திபன் பேசியது தான் இப்போது பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.

அதாவது ஆயிரம் கோடிக்கு ரெய்டு செய்ய வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு போனால் கண்டிப்பாக கிடைக்கும் என பார்த்திபன் வேடிக்கையாக பேசி இருந்தார். ஏனென்றால் படம் நன்றாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், இதனால் வசூலும் பல கோடி அள்ளும் என்பதை சூசகமாக பார்த்திபன் பேசி இருந்தார்.

Also Read : லைக்காவுக்கு பல்பு கொடுத்த பொன்னியின் செல்வன் 2.. ஊர் ஊராக ப்ரமோஷன் செய்தும் கிடைக்காத வசூல்

ஆனால் இப்போது லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரிய நிறுவனங்களும் இப்போது பதட்டத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் மேடையில் பார்த்திபன் பேசிய வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

நீ அப்போ பேசுனது இப்போ லைக்காவை எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பார்த்தியா என்று கமெண்ட்டும் செய்து வருகிறார்கள். ஒருவேளை பார்த்திபன் பேசியதால் ரெய்டு வந்ததா அல்லது இந்த ரெய்டை முன்பே பார்த்திபன் கணித்துள்ளாரா என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது.. 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

Trending News