திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடாமுயற்சிக்கு அவசரம் காட்டும் மகிழ்.. மீண்டும் விஜய்யுடன் மோத ரிலீஸ் தேதியை முடிவு செய்த அஜித்

Ajith in Vidamuyarchi: துணிவு படத்துக்கு பின் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவுமே சரியாக வெளிவராததால் ரசிகர்கள் ரொம்பவே துவண்டு போய்விட்டார்கள். இந்த சமயத்தில் அவர்களை குதூகலமாக ஆக்கும் விதமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அப்படி என்றால் விடாமுயற்சி படம் அவ்வளவுதானா, என்ன ஆச்சு என்ற பல கேள்விகள் எழும்பியது. அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிப்பதற்கு அவசர அவசரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்கு என்ன காரணம் என்றால் வருகிற ஜூன் மாதம் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகப் போகிறது. அப்படி ஆரம்பம் ஆகிவிட்டால் அப்படத்திற்கான கெட்டப்பிற்கு அஜித் மாறிவிடுவார். அதனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கேள்விக்குறியாகிவிடும்.  அதனால் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மகிழ் திருமேனி இருக்கிறார்.

ஆட்டம் கழண்டு போய் நிற்கும் லைக்கா

அதே நேரத்தில் படத்தை பாதியிலேயே டிராப் பண்ணவும் முடியாது. ஏனென்றால் லைக்கா பெரிய அளவில் பட்ஜெட்டுகளை செலவு செய்து இருக்கிறது. எப்படியாவது அஜித்தை வைத்து படத்தை முடித்து விட்டால் அவர் மூலம் நல்ல வசூலை பெற்று விடலாம். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் படம் நின்று விடக்கூடாது என்பதற்காக மகிழ் திருமேனிக்கு லைக்கா குடைச்சல் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் அஜித் தற்போது ப்ரீயா தான் இருக்கிறார். அதனால் இப்பொழுது மறுபடியும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  கூடிய விரைவில் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிடும். ஆனால் அஜித் இதில் போட்ட கண்டிஷன் என்னவென்றால் விஜய்யின் கோட் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகிறதோ, அப்பொழுதே விடாமுயற்சி படத்தை ரிலீஸ் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.

ஒருவேளை அந்த படம் தாமதமானால் இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று இரண்டு தேதியை பிக்ஸ் பண்ணி விடாமுயற்சி டீமுக்கு அஜித் கண்டிஷன் போட்டிருக்கிறார். எது எப்படியோ இந்த வருடத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் சம்பவம் செய்து ரசிகர்களை குஷி படுத்தப் போகிறது.

Trending News