வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

பல்லாயிரம் கோடி எடுக்க 1200 கோடி முதலீடு செய்யும் லைக்கா.. கைவசம் இருக்கும் 5-க்கும் மேலான படங்கள்

ஒரு காலத்தில் லைக்கா தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது நங்கூரம் போல் தனது நிறுவனத்தை நிலைநிறுத்தி உள்ளது. அதாவது பல்லாயிரம் கோடி வசூல் எடுக்க 1200 கோடியை லைக்கா தமிழ் சினிமாவில் முதலீடு செய்துள்ளது.

அந்த வகையில் இயக்குனர் மணிரத்னதுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் முதல் பாகம் வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Also Read : இணையத்தில் ட்ரெண்டாகும் ஏகே 62 டைட்டில் போஸ்டர்.. கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த லைக்கா

இதைத்தொடர்ந்து இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் லைக்கா கைவசம் உள்ளது. அதன்படி ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை 250 கோடி பட்ஜெட்டில் லைக்கா தயாரித்து வருகிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்ய உள்ளது.

மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தையும் 100 கோடி பட்ஜெட்டில் லைக்கா தான் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஏகே 62 படத்தை கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறது.

Also Read : லைக்காவை மிரளச் செய்த அஜித்தின் கட்டளை.. கட் அண்ட் ரைட்டாக செக் வைத்த ஏகே

முதல்முறையாக இந்த படத்தில் மகிழ்திருமேனி, அஜித் இணைய உள்ள நிலையில் படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தையும் லைக்கா 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இது தவிர ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடரிலும் லைக்கா முதலீடு செய்துள்ளது. அதன்படி அருள் செழியன் இயக்கத்தில் விதார்த் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் தொடரையும், ரோகினி வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் தொடரையும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக லைக்கா தயாரிக்கிறது.

Also Read : ஓவர் பர்ஃபெக்ஷன் பார்க்கும் அஜித்.. ஏகேவை ஓரம்கட்டி விட்டு பிரபல நடிகரை லாக் செய்த லைக்கா

- Advertisement -spot_img

Trending News