Chandramukhi 2: பி வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி மாபெரும் ஹிட்டாய் அமைந்தது. சுமார் 18 வருடத்திற்கு பின் இப்படத்தின் பாகம் 2 படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 890 நாட்கள் திரையில் ஓடி வசூலில் சாதனை கண்ட அப்படத்தின் வசூலை விட, பாகம் 2ல் இரட்டிப்பு மடங்கு அதிகரிக்க லைக்கா மேற்கொள்ளும் ராஜதந்திரத்தை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
திகில் ஊட்டும் படமான சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியின் நகைச்சுவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்படத்தில் வேட்டையன் கதாபாத்திரம் ஏற்று நடித்த ரஜினி, இயக்குனர் வாசு சந்திரமுகி 2 வின் கதையை சொன்னபோது அவற்றை நிராகரித்து விட்டாராம்.
Also Read: பல கோடியில் புரளும் தமன்னா.. 33 வயதில் மில்க் பியூட்டியின் மொத்த சொத்து மதிப்பு
அதைத்தொடர்ந்தே இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் இடம் பெற்று, படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
முதல் பாகத்தைப் போல இப்படத்தையும் மெகா ஹிட் ஆகிட வேண்டும் என்ற முயற்சியில் லாரன்ஸ் அண்ட் கோ காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக லைக்கா இப்படத்தின் தயாரிப்பை மேற்கொள்வதால், இதனின் பிசினஸும் பெரிய லெவலில் இருக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
Also Read: இந்தியன்-2 ரிலீஸ்க்கு கமல் போட்ட கண்டிஷனில் விழி பிதுங்கிய லைக்கா.. இது செஞ்சாதான் படமே வெளிவருமாம்
அதுவும் சீனியர் ஆர்டிஸ்ட்களான வடிவேலு, ராதிகா, லட்சுமிமேனன், கங்கனா ரனாவத், லாரன்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ள இப்படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், ஏன் இந்த தாமதம் என கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
படம் குறித்து இன்னும் கொஞ்சம் ஹைஃபை ஏற்றிவிட்டு அதன் பின் பெரிய பிசினஸை பார்க்க லைக்கா திட்டம் தீட்டி வருகிறது. வசூல் வேட்டைக்கான ஆரம்பமாய் இப்படத்தின் பிரீ ரிலீஸ் பங்க்ஷன் இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாம். அனேகமாக பெரிய ஆர்டிஸ்ட் யாராவது இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
Also Read: இதுவரை தேசிய விருதை தட்டி தூக்கிய 6 ஹீரோக்கள்.. மூன்று முறை வென்ற உலக நாயகன்