திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கண்ணீரோடு பாடலாசிரியர் சினேகன் போட்ட பதிவு.. சும்மாவா, மூன்று ஆண்டு தவமாச்சே!

Snehan: பாடல் ஆசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் பல தரமான பாடல்களை கொடுத்தவர். சினேகன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிக அளவில் பரிட்சயமானது பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மீது சில நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், கடைசி வரைக்கும் போராடி வென்ற போட்டியாளர் இவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னை மக்கள் நீதி மையம் கட்சியில் இணைத்து கொண்டார். இவருடைய மனைவி கன்னிகா சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். எட்டு வருடத்திற்கு மேலும் காதலித்த இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மூன்று ஆண்டு தவம்

கன்னிகா வந்த பிறகுதான் சினேகன் சோசியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிவானது. அது மட்டுமில்லாமல் சினேகன் எழுதிய நிறைய பாடல்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது கன்னிகா தான். சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கும் கன்னிகாவிற்கு ஓவியம் வரைவதிலும் ஈடுபாடு அதிகம்.

மூன்றாண்டு திருமண வாழ்விற்கு பிறகு நேற்று கன்னிகா மற்றும் சினேகன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கண்ணீரோடு பகிர்ந்து இருக்கிறார்கள். நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி என்ற வரிகளோடு கன்னிகா ஒரு விடியோவை பகிர்ந்திருக்கிறார்.

ஐ லவ் யூ அப்பா என்ற வரிகளோடு குழந்தை படத்துடன் ஓவியத்தை வரைந்து சினேகனை அழைத்து அதை காட்டுவதோடு, கருத்தரிப்பு சோதனை செய்த கிட்டயும் காட்டுகிறார். இந்த வீடியோவில் இருவருமே ரொம்பவும் உணர்ச்சிவசத்தோடு இருக்கிறார்கள்.

இந்த வீடியோவுக்கு நாங்க அப்பா அம்மா ஆக போகிறோம் என்ற கேப்ஷனை பதிவிட்டிருக்கிறார். சினேகன்-கன்னிகா தம்பதியின் இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News