சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வாலி போதையில் எழுதிய பாட்டு, பட்டிதொட்டி எங்கும் ஹிட்.. ஓ! இந்த பாட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

Lyricist Vaali: வாலிப கவிஞன் வாலி என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் பாடலாசிரியர் வாலி. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதிய அதே வாலி தான் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் முக்காலா முக்காப்புலா பாடலை எழுதியவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

காலத்திற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய கவி நடையை மாற்றி எழுதி பாடல்களால் ரசிகர்களை ஆட்கொண்டவர் வாலி. பாடல் எழுதியதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒன்று இரண்டு படங்களில் நடித்து அட இவருக்கு காமெடியும் அழகாக வருகிறதே என ரசிகர்களை மெய்மறக்க வைத்தவர்.

போதையில் எழுதிய பாட்டு, பட்டிதொட்டி எங்கும் ஹிட்

வாலி எழுதி பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு பாட்டின் பின்னணி கதை ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. வாலி பாடல் ஆசிரியராக அறிமுகமாகி முதல் ஐந்து வருடங்களுக்கு ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் எதற்குமே பாட்டு எழுத அழைப்பு வரவில்லையாம்.

அப்போது வாலி மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசையமைப்பில் பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டு மதியம் வீட்டுக்கு போய் மது அருந்தி இருக்கிறார். அந்த சமயத்தில் தான் வாலி தெய்வத்தாய் படத்திற்கு எழுதிய பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி கொண்டு இருந்ததாம்.

ஏவி மெய்யப்ப செட்டியார் வாலியை தன் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் சர்வர் சுந்தரம் படத்திற்கு பாடல்கள் எழுத அழைப்பு விடுத்திருக்கிறார். வாலி என்ன செய்வது என்று தெரியாமல் உடனே குளித்துவிட்டு போதையுடனே சென்று இருக்கிறார்.

சிட்டுவேஷன் சொல்லியதும் வாலி எழுதிய பாட்டு தான் அவளுக்கென்ன அழகிய முகம். சில நேரங்களில் பழைய பாடல்களை கேட்பதற்கு கொஞ்சம் சலிப்பாக இருக்கும். ஆனால் இந்த அவளுக்கு என்ன அழகிய முகம் பாடல் எப்போது கேட்டாலும் அப்படி ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

Trending News