வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம் ஆர் ராதா போட்ட முன்று கண்டிஷன்.. திக்குமுக்காடிய படக்குழு

தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எம்ஆர் ராதா. இவருடைய பேச்சும், நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

படத்திற்கு படம் இவர் கூறும் வசனங்கள் எல்லாம் மக்களுக்கு அறிவுரை சொல்வது போலவே இருக்கும். எம் ஆர் ராதா ரத்தக்கண்ணீர் படத்தில் நடிப்பதற்கு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அது என்னென்ன கண்டிஷன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

ரத்தக்கண்ணீர் படத்தில் நடிப்பதற்கு எம் ஆர் ராதா முதலில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த சமயத்தில் ஆளும் கட்சியில் நிறைய ஊழல்கள் நடந்ததால் அப்போது அவர்களை வைத்து கேவலமாக பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

mr-radha-cinemapettai
mr-radha-cinemapettai

அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு நாடக குழுவை வைத்திருந்தார். அதில் 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றி இருந்தனர். அப்போது தான் ரத்தக்கண்ணீர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் எம்ஆர் ராதா எனக்கு சினிமா வேண்டாம் நாடகமே போதும் ஏனென்றால் நாடகத்திலேயே எனக்கு நல்ல வருமானம் வருகிறது என கூறியுள்ளார். ஆனால் விடாமல் அவரை நடிக்குமாறு கூறியதால் பின்பு ஒரு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்.

இரவு நேரத்தில் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளார். என்னுடைய நாடகக் கம்பெனியில் பணியாற்றிய வேலையாட்களுக்கு தான் படத்தில் வேலை கொடுக்கணும் என கூறியுள்ளார்.

நான் சாப்பிடும் சாப்பாட்டை தான் அவர்களும் சாப்பிட வேண்டும் என மூன்று கண்டிஷன்கள் போட்டுள்ளார். இதனை ஒப்புக் கொண்ட பிறகுதான் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Trending News