Sivaji-MR Radha: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற நடிப்பினை வெளிக்காட்டும் தன்மை கொண்டவர் சிவாஜி. அவ்வாறு இருக்கையில் இவர் மேற்கொண்ட சம்பவத்தால் மனம் கசந்து பாடம் புகட்டிய எம் ஆர் ராதாவின் செயல் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.
சிவாஜி, எம்ஜிஆர் காலத்திற்கு முன்பே தன் எதார்த்தமான நடிப்பாலும், தனித்துவமான குரல் வளர்த்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய பிரபலம் தான் எம் ஆர் ராதா. இவர் ஏற்று நடித்த எண்ணற்ற படங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாய் அமைந்திருக்கிறது.
Also Read: யானைக்கும் அடி சறுக்கும்.. விடாமுயற்சி தொடங்குமா? இல்லையா? மகிழ்திருமேனி போட்ட வைரல் பதிவு
தான் சம்பாதித்த பெயராலும், செல்வாக்காலும் அன்றைய காலத்திலேயே, சிவாஜி இடம் ஒரு செவர்லெட் கார் இருந்ததாக கூறப்படுகிறது. அக்காரைக்கொண்டே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்வாராம். அவ்வாறு ஒரு முறை அந்த காரில் பல சிறுவர்கள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனராம்.
அதை கண்டு டிரைவர் அந்த பசங்களை அவமானப்படுத்தி விரட்டி விட்டாராம். இதை சிவாஜி பெருதளவில் கண்டுக்கவே இல்லையாம். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்த எம் ஆர் ராதா அவருக்கே உரிய பாணியில் அடுத்த நாள் அந்த செவர்லைட் காரை புதிதாக வாங்கி வந்தாராம்.
Also Read: மகனை பழிவாங்க எஸ்.ஏ.சி பண்ண மோசமான வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வரும் தளபதியின் நண்பன்
அதன் பின் அந்த கார் டிக்கியில் வைகோலை வைத்து மாட்டை கழட்டி அதில் அந்த சிறுவர்களை உட்கார வைத்து படப்பிடிப்பு தளத்தை சுற்றி சுற்றி வர செய்தாராம். இதை பார்த்து மிகவும் வருத்தப்பட்டாராம் சிவாஜி. அதன் பின் தன் தவறை உணர்ந்து எம் ஆர் ராதாவிடம் அண்ணா நீங்கள் என் மீது தவறு இருந்தால் அதை கூப்பிட்டு, என்னிடமே சொல்லி இருக்கலாம்.
ஆனால் இந்த அளவிற்கு அவமானப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டு அன்றே அந்த செவர்லெட் காரை விற்று விட்டாராம். இத்தகைய சம்பவத்தை காண்கையில் தவறை உணர்த்த அவர்கள் பாணியிலேயே சென்று எடுத்துக்காட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார் எம் ஆர் ராதா.