வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!

Maamannan Movie: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த மாமன்னன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்திற்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்திருக்கின்றன. முதல் நாள் காட்சியிலேயே படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுவிட்டது.

மாமன்னன் திரைப்படத்தைப் பொறுத்த வரைக்கும் ரிலீஸுக்கு முன்பே படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றுவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே உதயநிதி ஸ்டாலின் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்துவிட்டார். ஒரு நடிகனாக இவர் தன்னுடைய கடைசி படத்தை எவ்வாறு தேர்வு செய்திருப்பார் என்பது மிகப்பெரிய ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டி விட்டது.

Also Read:வடிவேலுவின் புதிய பரிமாணம் ஒர்க் அவுட் ஆனதா.? மாமன்னன் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

மேலும் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைந்த போது வழக்கம் போல காமெடி டிராக்காக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேலுவின் தோற்றம் எல்லோரையும் திகைக்க வைத்து விட்டது. மேலும் அடுத்தடுத்து வடிவேலுவின் கதாபாத்திரம் இந்த படத்தில் சீரியஸ் ஆக இருக்கும் என்று அப்டேட்டுகள் வர வர, இதுவரை அவரை நகைச்சுவை கேரக்டர்களில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் அவருடைய கேரக்டரை பார்ப்பதற்கு ரொம்பவே ஆர்வம் ஆகிவிட்டனர்.

படத்தின் எதிர்பார்ப்புக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் நடிகர் பகத் பாசில்தான். விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு இவர் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் இவர் நடித்து இருப்பது, இன்ப அதிர்ச்சியாக அமைந்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகம் ஆகிவிட்டது.

Also Read:வேலியில போற ஓணானை வேட்டியில் விட்ட மாரி செல்வராஜ்.. நாரடித்த பாரி

மேலும் மாரி செல்வராஜின் இயக்கம் என்பதால் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் தாக்கம் இந்த படத்தின் மீது அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இசை வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன தேவர் மகன் திரைப்படத்தை பற்றி மாரி செல்வராஜ் பேசி இன்னும் அனல் பறக்க செய்திருந்தார். இதன் மூலம் படம் பயங்கர வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இன்று ரிலீஸ் ஆன மாமன்னன் திரைப்படம் சென்னையில் மட்டும் மொத்தம் 700 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு ஓப்பனிங் விஜய் மற்றும் அஜித் படத்திற்கு கூட இதுவரை கிடைத்தது இல்லையாம் . அப்படி ஒரு வரவேற்பை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கடைசி படத்தில் பெற்றிருக்கிறார். மேலும் இந்த படம் மக்களின் எதிர்பார்ப்பையும் ஓரளவுக்கு பூர்த்தி செய்து விட்டதாக விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

Also Read:மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

Trending News