Maamannan Twitter Review: கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளான மாமன்னன் திரைப்படம் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளை அலங்கரித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படம் பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே வடிவேலுவின் மாறுபட்ட பரிமாணம் ரசிகர்களை கவரும் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்றார் போல் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் இந்த வைகை புயல். வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் அவருடைய பர்பாமன்ஸ் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Also read: வேலியில போற ஓணானை வேட்டியில் விட்ட மாரி செல்வராஜ்.. நாரடித்த பாரி
அதுதான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. அவரை தொடர்ந்து பகத் பாசிலின் நடிப்பும், ஏ ஆர் ரகுமானின் இசையும், மாரி செல்வராஜின் தரமான திரை கதையும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. சில இடங்களில் எமோஷனல் காட்சிகள் மனதை தொடவில்லை என்றாலும் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

மேலும் இடைவேளை காட்சியும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். போர் அடிக்காத வகையில் நகரும் திரைக்கதை சில இடங்களில் எரிமலையாக வெடித்திருக்கிறது. அதிலும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் இடம்பெறும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Also read: மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்
ஒரு காமெடியனாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்த வடிவேலு மாமன்னனாக நிச்சயம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். அந்த வகையில் மாரி செல்வராஜின் இந்த படைப்பு காலம் கடந்தும் நிற்கும் என ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது முதல் காட்சியை பார்த்த பலரும் படம் திரும்ப பார்க்கத் தூண்டும் வகையில் இருக்கிறது என கூறி வருகின்றனர். இதுவே படத்திற்கான பக்க பலமாக அமைந்துள்ள நிலையில் மாமன்னன் நிச்சயம் சர்ச்சைகளை கடந்து சாதனையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

