வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆன்லைனில் கசிந்த மாநாடு திரைப்படம்.. அதிர்ச்சியான படக்குழு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் ஒரு வழியாக நவம்பர் 25 அன்று வெளியானது. டைம் லூப் பற்றிய வித்தியாசமான கதையை கொண்ட இத் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.(Maanadu online full movie download)

இப் படத்தில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா, சிம்புவிற்கு இணையாக வில்லன் கேரக்டரில் நடித்து மிரட்டியுள்ளார். அவருடைய நடிப்பை பார்த்த அனைவரும் கோலிவுட்டின் அடுத்த ரகுவரன் இவர்தான் என்று புகழும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.

இதனால் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான நான்கு நாட்களுக்கு உள்ளாகவே 20 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட கூட முடியாத அளவிற்கு தயாரிப்பாளருக்கு ஒரு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது மாநாடு படம் திரைக்கு வந்து சில நாட்களுக்குள்ளாகவே ஆன்லைனில் கசிந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ், மூவி ரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணைய தளங்களில் இப்படம் கசிந்து உள்ளதாக தெரிகிறது.

maanaadu-full-movie-free-download-online
maanaadu-full-movie-free-download-online

இதுபற்றி அறிந்த பலரும் தற்போது மாநாடு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இணையதளத்தில் தேடி வருகின்றனர். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலே அதை ஆன்லைனில் டவுன்லோட் செய்து பார்ப்பவர்கள் அதிகம். அதிலும் மாநாடு போன்ற வெற்றி திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால் இது போன்ற இணைய தளங்களுக்கு இது ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது.

படம் இணையதளத்தில் முறையற்று வெளியாவது இது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன்பே பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக திரையுலகைச் சேர்ந்த பலரும் என்னதான் முயற்சி எடுத்தாலும் இதுபோன்ற படங்கள் வெளியாவதை தடுக்க முடிவதில்லை.

Trending News