வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கேரள சினிமாவை தூக்கிவிடும் சிம்பு .. வசூல் மழையில் இருக்கும் படக்குழுவினர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விடுமுறை இல்லாத நாட்களில் வெளியானாலும் இப்படம் நல்ல வசூலை வாரி குவித்துள்ளது.

இதுவரை நாம் அதிகம் கண்டிராத புதுமையான கதை களத்தை விறுவிறுப்பு மற்றும் சுவாரசியம் கலந்து நமக்கு கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மாநாடு திரைப்படம் இதற்கு முன்பு வெளியான பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே எட்டு கோடி வரை வசூலித்து சாதனை புரிந்தது. மேலும் இப்படம் தற்போது வரை 50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் கேரளாவில் இப்படம் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே கேரள தியேட்டர்களிலும் மாநாடு திரைப்படத்திற்கு கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான மரக்கார் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் அங்கு மாநாடு திரைப் படத்திற்கு தியேட்டர்கள் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் இத்திரைப்படம் கேரளாவில் நல்ல கலெக்ஷனை ஈட்டியுள்ளது. இதனை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். இதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின் சிம்புவின் படத்திற்கு இப்படி ஒரு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் சிம்பு தன் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான நடிப்பை கொடுத்தது ஒரு முக்கிய காரணமாகும். இந்த வெற்றியை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது ஒரு சில படங்கள்தான் தங்களுக்கு லாபத்தை ஈட்டி கொடுக்கின்றனர். அந்த வரிசையில் சிம்புவின் மாநாடு படம் எங்களுக்கு பெரிய அளவில் கை கொடுத்து உள்ளதாக கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கேரளா சினிமாவில் வெளியான படங்களில் சிம்பு படம் தான் தற்போது அதிகமாக வசூல் குவித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

அதனால் சிம்புவின் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவதோடு மட்டுமில்லாமல் மற்ற மலையாளப்நடிகர்களின் படங்களை பார்ப்பதற்கும் சிம்புவின் மாநாடு படம் காரணமாக இருப்பதாகவும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Trending News