செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வசூலில் பட்டையை கிளப்பிய சிம்புவின் மாநாடு.. 2வது நாளில் இவ்வளவு வசூலா

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படம் பல பிரச்சினைகளுக்கு இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. படம் வெளியாகி தற்போது ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த அனைவரும் சிம்புவின் நடிப்பையும், வெங்கட்பிரபுவின் இயக்கத்தையும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படம் நல்ல விறுவிறுப்பாக செல்வதாகவும் வெகுநாட்களுக்கு பிறகு சிம்பு அசத்தலாக நடித்து இருப்பதாகவும் பல பாசிட்டிவ் கமெண்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோர் சிம்புவையும், வெங்கட் பிரபுவையும் பாராட்டியுள்ளனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்படம் வெளியாகி இரண்டு நாளிலேயே நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியாகி இதுவரை 14 கோடி வசூல் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மழையின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது.

ஆனால் இவ்வளவு மழையிலும் இப்படம் வெற்றி நடை போடுவது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர் மழை மட்டும் இல்லை என்றால் படம் இன்னும் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர்.

Trending News