புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவை கேவலமாக மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய மச்சான்.. தம்பியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மீனா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தம்பி காலேஜுக்கு போகாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்பில் ரௌடியாக மாறிவிட்டார் என்கிற உண்மை முத்துவிற்கு தெரிந்து விட்டது. அதனால் மீனா, தம்பிக்கு அடிபட்டு இருக்கிறது என்று சொல்லியும் முத்து, மச்சானை போய் பார்க்க போகாமல் சவாரிக்கு போனதாக சொல்லிவிட்டார்.

பிறகு முத்து சவாரிக்கு போகாமல் வீட்டில் இருப்பதை பார்த்த மீனா, என் தம்பிக்கு அடிபட்டு இருக்கிறது என்று சொல்லியும் நீங்கள் ஏன் பார்க்க வரவில்லை என்று கேட்கிறார். அதற்கு அவன் என்ன பண்ணுகிறான், ஏது பண்ணுகிறான் என்பதை கவனிக்காமல் அவன் இஷ்டத்துக்கு விட்டால் இப்படித்தான் நடக்கும் என்று முத்து கோபமாக பேசுகிறார்.

எப்பொழுதும் இல்லாமல் வழக்கத்துக்கு மாறாக முத்துவின் பேச்சும் நடவடிக்கையும் ஏன் இப்படி இருக்கிறது என்று குழப்பத்தில் இருந்த மீனாவும் அண்ணாமலையும், முத்துவிடம் நீ கண்டிப்பாக மச்சானை போய் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். அதனால் முத்துவும் அப்பாவின் பேச்சை தட்டமுடியாமல் மருத்துவமனைக்கு போகிறார்.

Also read: விஜயாவிடம் தொக்காக மாட்டப் போகும் மீனா.. முத்துவின் சண்டையை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் ரோகிணி

அங்க போய் பார்த்ததும் மச்சானுக்கு முத்து அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் மீனாவின் தம்பி, மாமா என்று கூட நினைப்பு இல்லாமல் வாய்க்கு வந்தபடி கேவலமாக பேசி, நீ ஒரு டிரைவர் குடிகாரன். உனக்கே வீட்டில மதிப்பு கிடையாது நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என்று ரொம்பவே அசிங்கமாக பேசி விடுகிறார்.

அத்துடன் என்னுடைய அக்கா தெரியாத்தனமாக உன்னை கட்டிக்கிட்டு கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கிறாள். இப்பதான் ஏதோ தாலியை வாங்கி கொடுத்துட்டு வந்து சீன் போட்ட. அதே மாதிரி அவளுக்கு இன்னும் நகை எல்லாம் வாங்கிக் கொடுக்க எத்தனை ஜென்மம் ஆகுமோ என்று முத்துவை அசிங்கப்படுத்தி விட்டார். இது என்னடா முத்துவிற்கு வந்த சோதனையாக எல்லாத்தையும் கேட்டு அமைதியாக போய்விட்டார்.

நடந்த விஷயத்தை மீனாவிடம் முத்து சொல்லாமல் மறைத்து விடுகிறார். ஆனால் அதே நேரத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் அவருக்கு அடிபட்டது கீழே விழுந்ததாக தெரியவில்லை. யாரோ ஒருவர் அவருடைய கையை அடித்து முறுக்கி இருக்கிறார்கள். அதனால் தான் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது என்று மீனாவிடம் சொல்லிவிடுகிறார். இதனைத் தொடர்ந்து மீனாவிற்கு தம்பியின் சுயரூபம் தெரிய வரப்போகிறது.

Also read: அடுத்த விவாகரத்தை உறுதி செய்த சன் டிவி சீரியல் நடிகை.. நீங்க சொல்ற காரணம் நம்புகிற மாதிரியா இருக்கு!

Trending News