வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முத்துவின் 2 லட்ச ரூபாய் கனவை சுக்குநூறாக உடைக்க போகும் மச்சான்.. தனக்குத்தானே சூனியம் வைத்த விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மூலம் மீனாவிற்கு 500 பூமாலை கட்டிக் கொடுக்கும் ஆர்டர் கிடைத்தது. அதை ஒரே நாளில் கட்டி கொடுக்கும் பொறுப்பு இருந்ததால் மீனா, அவருடைய தோழிகள் அனைவரையும் வீட்டிற்கு வரவைத்து பகலும் இரவுமாக கட்டி வருகிறார்கள். இவர்களுக்கு இரவு உணவு கொடுக்கும் விதமாக ரவி வீட்டிலேயே சமையல் செய்து அனைவருக்கும் கொடுக்கிறார்.

அப்பொழுது சூப்பர் என்று அனைவரும் பாராட்டிய பொழுது மீனாவின் தங்கையும் ரவிடம் சொல்கிறார். ஆனால் இதை எப்படியாவது தவறாக திரித்து பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்று நினைத்த விஜயா சுருதியை தனியாக கூப்பிட்டு பத்த வைக்கிறார். ஆனால் சுருதி அனைவரது முன்னாடியும் இந்த விஷயத்தை பற்றி போட்டு உடைத்து விஜயா மூஞ்சில் கரியை பூசி விடுகிறார்.

இதை பார்த்த அண்ணாமலை விஜயாவை கூப்பிட்டு திட்டி விடுகிறார். ஆக மொத்தத்தில் விஜயா தனக்குத்தானே சூனியத்தை வைத்துக் கொண்டார். இதற்கிடையில் வெட்டி வீராப்புடன் ரவி பண்ணும் சாப்பாடு எங்களுக்கு வேண்டாம் என்று ரோகிணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாம் என்று மனோஜையும் கட்டுப்படுத்தி விட்டார்.

Also read: மகனின் இமேஜை டேமேஜ் பண்ணிய விஜயா.. கணவருக்காக மாமியாருக்கு சவுக்கடி கொடுத்த சுருதி

கடைசியில் அதுவும் பண்ண முடியாமல் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக வீட்டில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடும் பொழுது முத்து கண்ணுக்கு பட்டுவிட்டார். எப்பொழுதுமே முத்துவிடம் பல்பு வாங்குவதே வேலையாக வைத்திருக்கிறார் ரோகினி. இதனை தொடர்ந்து மீனா சொன்னபடி அந்த 500 மாலை கட்டி முடியப் போகிறது.

இந்த விஷயத்தை மீனாவின் தம்பி சிட்டியிடம் உளறி விட்டார். அந்த வகையில் மீனா தம்பி உளறியதால் மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்கப் போகிறது. அதாவது சிட்டி அடியாட்களை வைத்து பூமாலை கட்டி கொண்டு போகும் லாரியை மடக்கி அதை சரியான நேரத்தில் கொடுக்க விடாமல் தடுத்து விடுவதற்கு பிளான் பண்ணி விட்டார்.

அப்படி இவர் பிளான் பண்ணியபடி நடந்தது என்றால் அந்த அமைச்சர் அனைத்து கோபத்தையும் முத்து மீது காட்டி பெரிய பிரச்சினையாக திரும்பிவிடும். அதன் மூலம் மீனாவிற்கும் முத்துவிற்கும் சண்டை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதன் காரணமாக இந்த பிளானை போட்டு இருக்கிறார். அப்படி மட்டும் நடந்து விட்டால் முத்து மீனாவின் கனவு சுக்கு நூறாக உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை எப்படியும் முத்து சரி செய்து விடுவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also read: டாம் அண்ட் ஜெரியாக மாறி கொஞ்சும் முத்து மீனா.. வயிற்றெரிச்சலில் பொங்க போகும் ரோகிணி விஜயா

Trending News