செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

விஷாலுக்கு பதில் ஜிவி பிரகாஷ் படம்.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை சொதப்பி வெளியிட்ட படக்குழு

தமிழில் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான எனிமி படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தொடர்ந்து தனது நடிப்பில் வெளியாகி வெற்றி துப்பாறிவளன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷால் இயக்கி நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை எனிமி படத்தை தயாரித்த வினோத் தயாரிக்க உள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு வெற்றி பெற்ற பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ரகுவரனின் பெயர் தான் மார்க் ஆண்டனி. இந்த பெயரை 90’ஸ் கிட்ஸ்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தற்போது வரை பாட்ஷா படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதனால் தானோ என்னவோ விஷால் அவரின் படத்திற்கு இந்த பெயரை தலைப்பாக தேர்வு செய்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் இது ஒரு பேன் இந்தியா படம் என குறிப்பிட்டுள்ளனர். தற்போது பிரச்சனை அது அல்ல. படத்தில் விஷால் இருக்க வேண்டிய இடத்தில் ஜிவி பிரகாஷின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் என்ன சமாசாரம் என விசாரித்த போதுதான் தெரிந்தது ஆதிக் ரவிச்சந்திரன் முன்னதாக ஜிவியிடம் ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளார். ஆனால் அந்த படம் பாதியில் டிராப் ஆகியுள்ளது. இதன் பின்னரே விஷாலிடம் பேசி ஆதிக் ரவிச்சந்திரன் ஓகே செய்துள்ளார். இந்நிலையில் ஜிவிக்காக தயார் செய்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படியே வெளியிட்டுள்ளார்கள்.

Vishal-Cinemapettai.
Vishal-Cinemapettai.

இது தற்போது சோசியல் மீடியாவில் கேலிக்குள்ளாகி உள்ளது. ஒரு இயக்குனர் இதை கூடவா கவனிக்க மாட்டார் என பலரும் ஆதிக்கை விளாசி வருகிறார்கள். மேலும் விஷால் நடிப்பில் என குறிப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜிவி பிரகாஷ் படத்தை வைத்து சொதப்பிய ஆதிக்கை பலரும் கேலி செய்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News