புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தற்கொலை, கடன், காதல் என ஏகப்பட்ட பஞ்சாயத்தில் மதகதராஜா.. MGR பங்குகளுக்கு வந்த சோதனை

மதகத ராஜா சுமார் 13 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம் பல கஷ்டங்களை தாண்டி இந்த பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இந்த படத்தை இயக்கியவர் சுந்தர் சி. இன்னும் தனக்கு உண்டான தனி பாணியில் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வருகிறார்.

சுந்தர் சியுடன் பயணித்த இயக்குனர்கள் பல பேர் இன்று ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ள சில பேர் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இன்றும் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சுந்தர் சி

மதகஜராஜா பெரிதும் பேசப்பட்ட இந்த படம் ஏன் இப்படி ஒரு சறுக்கல்களை சந்தித்தது என்பதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள். இந்த படத்தை (மரகதராஜாவை) சுருக்கமாக எம் ஜி ஆர் என அப்பவே பெயர் வைத்தனர். அதனாலேயே இதற்கு எதிர்பார்ப்புகள் அதிகமானது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் நிறுவனத்தின் எம் டி ரவிசங்கர் பிரசாத் திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு ஏகப்பட்ட கடன் இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறினார்கள்.

அந்த நேரத்தில் விஷால் வரலட்சுமியின் காதலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது அது முடிவுக்கு வந்துவிட்டது என்பது வேறு கதை. ஒரு கட்டத்தில் விஷாலே கடன்களை அடைத்து இந்த படத்தை திரையிடுவதற்கு முடிவு செய்தார். அதுவும் கைகூடி வரவில்லை.

சந்தானம் இந்த படத்தில் காமெடி ரோல் பண்ணி இருக்கிறார். அதுவும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. மரகத ராஜா படத்திற்கு ஏகப்பட்ட கடன் இருப்பதால் இதை ரிலீஸ் செய்து வருகிற லாபத்தை கடனாளிகள் பிரித்து கொள்ளும்படி தான் அக்ரிமெண்ட் போட்டுள்ளனர்.

Trending News