Madhampatty Rangaraj: குறுகிய காலத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். எங்கு திரும்பினாலும் இவருடைய வகை வகையான அறுசுவை உணவு பற்றித் தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு வருகிறது. முக்கியமாக சமைக்கும் உணவுகளில் ஏதாவது ஒரு புதுமையான விஷயங்களை பயன்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இவருடைய சமையல் என்றாலே பிரமாண்டம் மற்றும் அறுசுவை உணவுக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில் டாப் நடிகர்களின் வீட்டு விசேஷங்களுக்கு இவர் இல்லாமல் விருந்து இல்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டது. அந்த அளவிற்கு இவருடைய கை வண்ணம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
குடும்பத்துடன் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்
அத்துடன் சமையல் தொழிலை கார்ப்பரேட் அளவுக்கு கொண்டு போய் பெருமை சேர்த்த புகழ் இவரையே சாரும். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார். இவரைப் பற்றி தெரிந்து கொல்வதற்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
தற்போது இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாயிருக்கிறது. அதாவது பிரபல சமையல் கலைஞரும் மற்றும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதில் இவருடைய மனைவியை பார்க்கும் பொழுது அப்படியே அச்சு அசல் சாய்பல்லவியை பார்ப்பது போலவே இருக்கிறது.