மாடர்ன் காந்திமதியாக மாறிய யோகி பாபு.. மாதம் பட்டி ரங்கராஜின் மிஸ் மேகி டீசர் எப்படி இருக்கு.?

miss maggie
miss maggie

Miss Maggie Teaser: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். அதே போல் பல முக்கிய சினிமா விழாக்கள் இவருடைய சமையல் இல்லாமல் கலை கட்டாது.

இப்படி பிஸியாக இருக்கும் இவர் ஏற்கனவே மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு ஜம்முன்னு இருக்கும் இவர் அடுத்து எப்போது ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

அந்த வகையில் தற்போது அவர் யோகி பாபுவுடன் இணைந்து மிஸ் மேகி படத்தில் நடித்து முடித்துள்ளார். லதா ஆர் மணியரசு இயக்கத்தில் ஆத்மிகா இப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் காதலியை கரம் பிடிக்க போராடும் இளைஞராக மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார். அதேபோல் வக்கீலாக வரும் யோகி பாபு வாயில் கண்டம் கோர்ட்டில் தண்டம் என வடிவேலுவின் வண்டு முருகன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறார்.

பெண் வேடத்தில் கலக்கும் யோகி பாபு

இப்படி சாதாரணமாக ஆரம்பித்த டீசரின் இறுதியில் யோகி பாபு பெண் வேடத்தில் வரும் காட்சி குபீரென சிரிப்பூட்டுகிறது. பார்ப்பதற்கு ஒரு பக்கம் மாடர்ன் காந்திமதி போலவும் மற்றொரு பக்கம் ராட்சசன் படத்தில் வரும் வில்லி ஆயா போலவும் இருக்கிறார்.

இதுவே பயங்கர காமெடி அலப்பறையாக இருக்கிறது. அதனால் நிச்சயம் இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரும் எனவும் தெரிகிறது. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அழகாக தெரிகிறார்.

இப்படத்தில் கொஞ்சம் டல் அடிப்பது போல் இருக்கிறாரே எனவும் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ இந்த மிஸ் மேகியை ரசிகர்கள் திரையில் காண்பதற்கு இப்போது ஆவலாக இருக்கின்றனர்.

யோகி பாபு நடிப்பில் வெளியாகும் அடுத்த படம்

Advertisement Amazon Prime Banner