Actor Madhavan: 90களில் ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன், 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எட்டு வருட காதல் மற்றும் டேட்டிங்கில் இருந்த இவர்கள், அதன் பிறகு தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தான் மாதவன் சூப்பர் ஸ்டாராக வளர்ந்தார்.
ஆனால் இவர் நிஜ மனைவியுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார், அது கௌதம் மேனன் பார்த்த வேலை தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்ட மாதவன் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிறமொழிப் படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.
Also Read: ஜோதிகா போலவே சூர்யா எடுத்திருக்கும் தில்லான முடிவு.. கேப்பில் கிடா வெட்டிய பட வாய்ப்பு
2001ல் மாதவன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, இந்த படத்தை அப்படியே ஹிந்தியிலும் ரீமேக் செய்தார். அதிலும் மாதவன் தான் லீட் ரோலில் நடித்திருந்தார். தமிழில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தி வெர்ஷனில் சைஃப் அலி கான் நடித்திருப்பார். இந்தப் படம் ‘ரெஹ்னா ஹை டெர்ரே தில் மே’ என்ற டைட்டிலில் ரிலீஸ் ஆனது.
இந்த படம் தான் பாலிவுட்டில் மாதவனை தூக்கி நிறுத்திய படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் மாதவனின் கல்லூரி காலங்கள் எல்லாம் முடிந்து, அவர் ஒரு கம்பெனியில் கிளாஸ் எடுப்பது போல் ஒரு காட்சி காட்டப்பட்டிருக்கும். ஹிந்தி வெர்ஷனில் மாதவன் கிளாஸ் எடுக்கும் போது அதில் ஒரு மாணவியாக அவருடைய நிஜ மனைவி நடித்திருப்பார்.
இந்த விஷயம் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது அந்த சஸ்பென்ஸை மாதவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடைத்திருக்கிறார். அந்த படம் நடிக்கும் போதே மாதவன் மற்றும் சரிதா இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனைவியை மாணவியாக்கிய கௌதம் மேனனின் தில்லாலங்கடி வேலையை தடுக்க முடியாமல் அப்போது வளரும் நடிகராக இருந்த மாதவன் வேடிக்கை தான் பார்க்க வேண்டியதாக இருந்ததாம்.
இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேடி தேடி கண்டுபிடித்து போடுவார். அப்படி மாதவனுடன் ஷூட்டிங் பார்க்க வந்த சரிதாவையும் இந்த படத்தில் கிளாஸ் கவனிக்க கூடிய ஸ்டுடென்ட் ஆக மாற்றி விட்டார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
நிஜ மனைவியுடன் நடித்துள்ள மாதவன்

Also Read: நம்பி மோசம் போன மணிரத்தினம்.. யானைக்கும் அடிசறுக்கும் என அமைந்த 5 மோசமான படங்கள்