சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மாதவனுக்கு பிறகு சாக்லேட் பாயாக வலம் வந்த 5 நடிகர்கள்.. என்ன புரோஜனம், அவர் இடத்தை பிடிக்க முடியவில்லை

தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் பெண்கள் மனதை கொள்ளை அடித்தவர் மாதவன். அதன் பிறகு அவருடைய துள்ளலான நடிப்பால் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போதும் அவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். மாதவனுக்கு பிறகு சாக்லேட் பாயாக பல நடிகர்கள் வலம் வந்துள்ளார்கள். ஆனாலும் சினிமாவில் அவர்களால் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை.

ஷயாம்: விஜய்யின் குஷி படத்தின் மூலம் அறிமுகமான ஷயாம், 12B, நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்கை என பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவருடைய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

அப்பாஸ்: காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அப்பாஸ். இதைத்தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, படையப்பா போன்ற படங்களால் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். அப்பாஸின் தவறான பட தேர்வுகளால் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போய்விட்டது.

பரத்: பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். காதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்த பரத்தின் சில படங்கள் சரியாக போகவில்லை. தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

சித்தார்த்: ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சித்தார்த். இவர் முதல் படத்திலேயே பெண்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும் சித்தார்த் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

ஹரிஷ் கல்யாண்: சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ்க்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருந்தனர். இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் பெண் ரசிகர் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். ஒரு சில பட தோல்வியால் இவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளார்கள்.

Trending News