ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூனியக்கார சைக்கோவாக மிரட்டும் மாதவன்.. ஜோதிகாவின் ஈர கொல நடுங்க வைக்கும் ஷைத்தான் ட்ரெய்லர்

Shaitaan Trailer: இப்போதெல்லாம் திகில், அமானுஷ்ய படங்களுக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. அதை நன்றாக தெரிந்து கொண்ட இயக்குனர்களும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆடியன்ஸை மிரட்டி தள்ளி விடுகின்றனர். அப்படி ஒரு பயங்கரத்துடன் வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் தான் சைத்தான்.

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்கி போடிவாலா நடித்துள்ள இப்படத்தை விகாஸ் பால் இயக்கியுள்ளார். ஏற்கனவே இதன் டீசர் மிரட்டலாக இருந்த நிலையில் தற்போது ட்ரெய்லரை பார்த்தால் ஈரக் கொலையே நடுங்கி விடுகிறது.

Also read: டாம் அண்ட் ஜெரியாக மோதும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்.. கெட்ட வார்த்தைகளால் தெறிக்க விட்ட போர் ட்ரெய்லர்

அஜய் தேவகன், ஜோதிகா வீட்டுக்குள் நுழையும் மாதவன் ஹிப்னாடிசம் மூலம் அவர்களுடைய மகளை கண்ட்ரோல் செய்கிறார். இப்படி தொடங்கும் ட்ரெய்லரில் ஜோதிகாவின் மகள் மாதவனின் பேச்சை கேட்டு செய்யும் ஒவ்வொரு விஷயமும் மரண பீதியை உண்டாக்குகிறது.

அதிலும் தன் அப்பாவையே எதிர்த்து நிற்பதும் ஒரு கட்டத்தில் அவரையே அறைவதும் என மிரட்டி இருக்கிறார் ஜான்கி. இறுதியில் கேஸ் சிலிண்டர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அதை பற்ற வைக்க தீப்பெட்டியுடன் தயாராக இருக்கும் அந்த காட்சி வேற லெவலில் இருக்கிறது. இப்படி கொடூரமாக வெளிவந்திருக்கும் ட்ரெய்லரில் சூனியக்கார சைக்கோவாக வரும் மாதவன் மிரட்டி தள்ளி விட்டார்.

Also read: காவல்துறைக்கே சவால் விடும் தொடர் கொலைகள்.. ராட்சசனை மிஞ்சும் ரணம் அறம் தவறேல் ட்ரெய்லர்

கண்ணசைவில் ஒரு குடும்பத்தை கண்ட்ரோல் செய்வதும் இறுதியில் நரகத்தின் தலைவன் போல் ஆட்டி படைப்பதும் என மொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். இப்படியாக அமானுஷ்யம் கலந்து வெளிவந்திருக்கும் இந்த ட்ரெய்லர் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News