வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

5 தமிழ் படங்களோடு முடிந்த சகாப்தம்.. மாதவன் கேரியரை தூக்கி நிப்பாட்டிட்டு ஐட்டம் டான்சராக மாறிய நடிகை

Madhavan Movie Actress: 90களில் சாக்லேட் பாயாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகர் மாதவன். இவர் முக்கால்வாசி தேர்ந்தெடுத்தது ரொமான்டிக் மற்றும் காதல் போன்ற படங்கள். அதன் மூலம் பெண் ரசிகர்கள் அனைவருக்கும் ஃபேவரிட் ஹீரோவாக இருந்தார். கொஞ்ச படங்களுக்குப் பிறகு தமிழ் வேண்டாம் என்று ஹிந்தியில் இவருடைய கவனத்தை திருப்பி அங்கே பிசியாக நடிக்க சென்றார்.

இதனை அடுத்து ரொம்ப ஆண்டு கழித்து தமிழில் ரீ என்டரி கொடுக்கும் விதமாக செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கினார். அந்த நேரத்தில் இவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆகி இவருக்கு மீண்டும் தமிழில் நடிப்பதற்கு கை கொடுத்த படமாக வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் நிறைய படங்கள் தேடி வந்தது.

Also read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

தேடிவந்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி நடிக்க ஆரம்பித்தார். அப்படி இவருக்கு ரீ என்டரில் கை கொடுத்த படம் தான் இறுதிச்சுற்று. இந்த படத்தில் உண்மையான ஒரு குத்துச்சண்டை வீராங்கனியை நடிக்க வைத்தால் எதார்த்தமாக இருக்கும் என்று இயக்குனர் முடிவெடுத்தார்.

அந்த சமயத்தில் இவருக்கு கிடைத்த நடிகை தான் ரித்திகா சிங். இவர் உண்மையாலேயே தற்காப்பு கலையை முறையாக கற்று இருக்கிறார். அதனால் இவர் நடித்தால் படம் தத்துரூபமாக இருக்கும் என்று இவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக வரவேற்பு பெற்றது.

Also read: மாதவன் சினிமாவை வெறுக்க காரணமாய் அமைந்த 5 படங்கள்.. நடிப்பே வேண்டாம் என துபாய் பறந்த மேடி

இதன் மூலம் இந்த நடிகை கொஞ்சம் பிரபலமானதால் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்களுடன் கூட்டணி போட்டு நடித்து படங்களை வெற்றியடைய செய்தார். அதில் முக்கியமாக இவர் நடித்த ஓ மை கடவுளே நல்ல ரொமான்டிக் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஐந்து படங்களில் நடித்து முடித்தார்.

ஆனால் தற்போது இவருடைய நிலைமை ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் ஆடுவது போல் ஆகிவிட்டது. அதுவும் இப்பொழுது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ஐட்டம் டான்சராக மாறிவிட்டார். இதன் மூலமாவது தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என்று புது அவதாரத்தை எடுத்திருக்கிறார்.

Also read: விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

Trending News