தமிழ் சினிமாவில் மேடி என்ற பெயரை தெரியாதவர்கள் இருக்க முடியாது, அலைபாயுதே படத்தின் மூலம் சாக்லேட் பாயாக ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தவர் தான் மாதவன்.
ஒரு நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது இயக்குனர் வரை பல திறமைகளைக் கொண்ட மாதவன், நேற்று 51வது பிறந்தநாளை கொண்டாடினார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரசிகை ஒருவர் போட்ட கமெண்டுக்கு பதில் அளித்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் அறிமுகமான மாதவனுக்கு முதல் படத்திலே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
அதற்குப் பின்னர் கௌதம் மேனன் மின்னலே, அன்பே சிவம், ஆயுத எழுத்து போன்ற படங்கள் இன்றும் இவர் பெயரே நிலைத்து இருக்கும். காலபோக்கில் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் கொடிகட்டி பறந்தார் மாதவன்.
இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பிலிம்பேர், SIIMA போன்ற பல விருதுகளை தட்டி தூக்கினார் மாதவன்.
2021 ஆம் ஆண்டு மாறா என்ற படம் வெளிவந்தது, அடுத்து ராகெட்ரி: நம்பி விளைவு என்ற படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நம்பி நாராயணன் என்ற கதாபாத்திரத்தில் மாதவன் தனது முழுத் தோற்றத்தை மாற்றி நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
அவர் பிறந்தநாளுக்கு போட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகை ஒருவர் எனக்கு 18 வயது ஆகிறது என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மாதவன் என்னை விட அழகான நல்ல கணவர் உங்களுக்கு கிடைப்பார் என பொறுமையாக பதில் அளித்துள்ளார். 51 வயதிலும் லவ் ப்ரொபோஸ் வந்துள்ள மாதவனை பார்த்து கோலிவுட் வட்டாரங்கள் பொறாமை படுகின்றனர்.