இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் லிங்குசாமி திரைத்துறையில் இன்று ஜொலிக்கும் பல்வேறு நட்சத்திரங்களை போலவே லிங்குசாமியும் ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வந்தவர் தான்.
லிங்குசாமி இயக்கத்தில் “ஆனந்தம்” வெளியாகி ஓடிக்கொண்டிருந்த அதே தருணத்தில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு கதையோடு சென்றிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. கதை பிடித்துப்போன ஆர்.பி.சௌத்ரி அப்போதைய தருணத்தில் மின்னலே படத்தில் பார்த்த நடிகர் ஆர்.மாதவனை வைத்து எடுக்கலாம் என்ற முடிவு எட்டியது ஆர்.பி.சௌத்ரிக்கு.
உடனே மாதவனிடம் லிங்குசாமியின் கதை குறித்து தெரிவிக்கவே லிங்குசாமியை தொடர்பு கொண்டாராம். எப்போதுமே பரபரப்பாக இருக்கும் மாதவனோ கதை சொல்ல எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்கவே தாமதிக்காமல் லிங்குசாமி கூறிய பதிலோ 2 மணி நேரமாவது ஆகும் என்றாராம்.
என்னது அவ்வளவு நேரமா என்றவருக்கு தங்களுக்கு எப்போது இரண்டு மணி நேரம் ஒதுக்க முடியுமோ அப்போது அழையுங்கள் என்றாராம். இ்ந்தபக்கம் கட் செய்து அந்த பக்கம் சௌத்ரிக்கு கால் செய்த மாதவன் என்ன சார் இப்படி சொல்கிறார் என்றாராம்.
பிறகு ஒருவழியாக அவரை 2 மணி நேரத்திற்கு மேல் கதை கேட்க சம்மதித்த மாதவன் கேட்டு முடிக்கையில் 3மணி நேரம் முடிந்தும் போனதாம். பிறகு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற லிங்குசாமிக்கு பல்வேறு ஆச்சர்யங்களை தந்தாராம் மாதவன்.
இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் மீராஜாஸ்மின் மீது அதிக கவனம் செலுத்திய லிங்குசாமியை இடைமறித்த மாதவனை ஏன் என்ன கண்டுக்கவே மாட்டேங்குறீங்க என்று கேட்க நீங்கள் சரியாக செய்யும் போது நான் எதை கூறி கவனிப்பது என்றாராம். இப்படியாக ரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரிஸ்யங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் இயக்குனர் லிங்குசாமி.