திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

குடிகார நடிகர் என்று கலாய்த்த ரசிகர்.. நாசுக்காக தரமான பதிலடி கொடுத்த மாதவன்.. ஐயோ பாவம்!

வயதாகியும் கூட இன்னமும் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் இமேஜ் உடன் வலம் வருபவர் தான் நடிகர் மாதவன். மாதவனை சமூக வலை தளத்தின் வாயிலாக கலாய்த்த ரசிகருக்கு செம பதிலடி கொடுத்துள்ளார்.

காதல் படங்களின் மூலம் இளம் பெண்களின் மத்தியில் காதல் நாயகனாக வலம் வந்த மாதவன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ரன் படத்தின் மூலம் அதிரடி நாயகனாக மாறினார்.

காதல் நாயகனாக இருந்திருந்தால் இந்நேரம் முன்னணி நடிகராக இருந்திருப்பாரோ, என்னமோ. மாஸ் நடிகராக ஆசைப்பட்டு தன்னுடைய பிளஸ் என்ன என்பதை மறந்து தேவையில்லாமல் மார்க்கெட்டை இழந்தார்.

சிலகாலம் பாலிவுட் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த மாதவனை மீண்டும் ஒரு ஹீரோ இமேஜ் உடன் தமிழ் சினிமாவுக்கு வந்தார் சுதா கோங்கரா. இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் வேதா படமும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது மாதவனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் அடுத்ததாக மாறா என்ற படம் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாதவனின் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர், எனக்கு ஒரு காலத்தில் மாதவனை பிடிக்கும் எனவும், ஆனால் என்று அவர் குடிக்கு அடிமையானாரோ, அப்போதிலிருந்து அவரை வெறுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

madhavan-reply-tweet
madhavan-reply-tweet

அதற்கு மாதவன் பதிலடி கொடுக்கும் வகையில், இதுதான் உங்க புரிதலா? சீக்கிரம் நீங்கள் டாக்டரை அணுகினால் நல்லது என பதிலடி கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் மாதவன் சற்று டென்ஷனாகி விட்டார் என்றே சொல்லலாம்.

Trending News