வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கழற்றிவிட்ட சூர்யா.. வீட்டை அடமானம் வைத்து 80 லட்சம் கொடுத்த மாதவன்

மாதவன் செய்த செயலை போன்று சூர்யா செய்யவில்லை என பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் நம்பி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாதவனுக்கு உண்மையான நம்பி அவர்கள் படம் ரிலீசாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 80 லட்சம் வரை கொடுத்து உதவினார். மேலும் மாதவனின் வீட்டை அடமானம் வைத்து ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

இருந்தாலும் நிஜமான நம்பி நாராயணனுக்கு மாதவன் பணம் கொடுத்து உதவியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது இத்திரைப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இருளர் இன மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை உண்மையான கதையை மையமாக கொண்டு இப்படத்தை இயக்குனர் டி.எஸ்.ஞானவேல் இயக்கத்தில் வெளியானது.

இத்திரைப்படம் வெளியாகி உலக அளவில் பல விருதுகளையும், பல பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் உண்மை கதாபாத்திரமான பார்வதிக்கு, சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 15 லட்சம் வரை வழங்கப்பட்டது. அதற்கு மேல் தமிழக அரசும், ராகவா லாரன்சும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆனால் சூர்யா தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.இதனிடையே மாதவன் பணம் இல்லாத போதும் பல வழிகளில் நம்பி நாராயணனுக்கு உதவிகளை வழங்கி வருகிறார். ஆனால் சூர்யா ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளராக இருந்துக்கொண்டு பார்வதிக்கு உதவாமல் உள்ளார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றதில் நடித்த நிலையில், இக்காட்சி படமாக்கப்படும் போது படப்பிடிப்பிற்கு வந்த சூர்யா நம்பி நாராயணனையும்,மாதவனையும் பார்த்து ஒரே மாதிரி உள்ளீர்கள் என ஆச்சர்யப்பட்டு பார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending News