சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் மாதவன்.. விஜய் சேதுபதியின் அடுத்த வரிசையில் மேடி.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகன் மாதவன் 2000-ன் ஆரம்பகாலங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவருக்கு அடுத்தடுத்த ஆக்சன் படங்கள் வெகுவாக ஹிட் தரவில்லை.

சமீப வருடங்களில் வெளியான விக்ரம் வேதா மாறா இறுதிச்சுற்று படங்கள் மாதவனுக்கு நல்ல கம்பேக் தந்தது. அதனை தொடர்ந்து அவருக்கான வாயப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு படத்தில் வில்லனாக அவதரிக்க இருக்கிறார் மாதவன்.

ஏற்கனவே 2015ல் வெளியான தனி ஒருவன் படத்தின் வாயிலாய் அரவிந்த் சாமிக்கு நல்ல கம்பேக்கும் வில்லனாக ஒரு புதிய ரோல் தந்து மிரட்டியிருந்தார் மோகன் ராஜா. தொடர்ந்து ஸ்மார்ட் கேரக்டர்களை வில்லனாக்குவதில் வித்கராய் இருந்து வருகிறார் மோகன் ராஜா.

பல்வேறு ரீமேக் படங்களை இயக்கிய மோகன் ராஜா அடுத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார் இப்படமும் ஒரு ரீமேக் படம் தானாம்.

chiranjeevi-cinemapettai
chiranjeevi-cinemapettai

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாகும் இந்த படம் நடிகர் மாதவனுக்கு முதல் வில்லன் அறிமுகமாக அமைய உள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும் ரஜினி, விஜய், கமல் என தமிழன் முதன்மை நடிகர்களுக்கு வில்னாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News