வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரீ என்ட்ரி-யில் பட்டைய கிளப்பிய மேடியின் 5 திரைப்படங்கள்.. இரண்டு வருடம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்த மாதவன்

Actor Madhavan: தமிழ் சினிமாவில் மாதவன் 2000 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சாக்லேட் பாயாக ரசிகர்களின் மனதில் நச்சுன்னு ஒரு இடத்தை பிடித்தவர். அதிலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் பெண்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் காதலுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்திருக்கும்.

முக்கியமாக அலைபாயுதே படத்தில் காதலை ப்ரொபோஸ் பண்ணும் விதம் இப்பொழுது வரை ட்ரெண்டியாகத் தான் இருக்கிறது. இப்படி தொடர்ந்து காதல் படங்களை கொடுத்துட்டு வந்தவர் திடீரென்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து நடிக்காமல் ஒதுங்கி விட்டார். அதற்கு காரணம் இவருடைய பையன் தான் என்று கூறியிருக்கிறார்.

Also read: சினிமா நிழல் கூட வேண்டாம் என வாரிசுகளை தவிர்க்கும் 4 ஹீரோக்கள்.. மணிரத்தினம் கூப்பிட்டும் மறுத்த மாதவன்

அதாவது இவருடைய மகன் ஒரு நல்ல நீச்சல் வீரராம். இது சம்பந்தமான நிறைய தங்க பதக்கங்களை வாங்கி இருக்கிறார். இதனால் இவருடைய ஃப்யூச்சரை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு நல்லபடியாக ஒரு நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்காக பிரேக் எடுத்தேன் என்று இவரே கூறி இருக்கிறார்.

அவருடைய மகனின் வருங்காலம் நல்லபடியாக அவர் நினைத்தபடி கனவுகளை எல்லாம் மேம்பட செய்வதற்காக உழைத்துக் கொண்டிருந்தார். அதனால் தான் அந்த இரண்டு வருடங்கள் பிரேக் எடுத்து இருக்கிறார்.

Also read: மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் கொடுத்த 5 ஹிட் படங்கள்.. ஜோவையே காதலில் உருக வைத்த மேடி

ஆனால் அதன்பின்பு எப்படி போனேனோ அதே மாதிரி திரும்ப வந்துட்டேன் என்று சொல்லும்படியாக சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அத்துடன் பல படங்களில் கமிட்டாய் அந்த படங்கள் அனைத்தும் வெற்றியடைய செய்திருக்கிறார்.

அப்படி இவர் ரீ என்ட்ரி கொடுத்து நடித்த படங்கள் தான் விக்ரம் வேதா, இறுதி சுற்று, மகளிர் மட்டும், நிசப்தம், ராக்கெட்ரி. இந்த படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல இமேஜை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Also read: அதிக சம்பளத்தை கேட்ட மாதவன்.. முடியாது என மறுத்த தயாரிப்பாளரை அசிங்கப்படுத்திய கொடுமை!

Trending News