மூன்று முடிச்சு சீரியலில் பொய் சொல்லி சூர்யாவை நம்ப வைத்த மாதவி.. நந்தினியின் கர்ப்பம், அதிர்ச்சியில் சுந்தரவல்லி

moondru muduchu
moondru muduchu

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், பொறுப்பில்லாமல் எந்நேரமும் குடித்துக் கொண்டு சுந்தரவள்ளியை வெறுப்பேற்றும் விதமாக சூர்யா பல விஷயங்களை செய்து வந்தார். அப்படிப்பட்ட சூர்யா தற்போது முதல்முறையாக கம்பெனியில் டெண்டர் விசயத்தில் ஜெயித்துக் காட்டுகிறேன் என்று சபதம் போட்டு வெற்றியை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் மாதவி, சூர்யா கோட் பண்ணிய டெண்டர் தொகையை தெரிந்து கொண்டு எதிரி கம்பெனிக்கு தெரிவித்து விட்டார். இது தெரியாத சூர்யா குடும்பத்தில் இருப்பவர்கள் சூர்யா ஜெயித்து விட்டு வருவார் என்று ஆரத்தியுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சூர்யாவுக்கு கிடைத்தது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அந்த கோபத்துடன் வீட்டிற்கு வந்த நிலையில் நான் கோட் பண்ணிய தொகை வெளியே எப்படியோ தெரிந்து போயிருக்கிறது. அதனால் தான் வெறும் பத்து ரூபாயை அதிகமாக வைத்து என்னை தோற்கடித்திருக்கிறார்கள் என்று சூர்யா குடும்பத்தில் இருப்பவரிடம் புலம்பி விட்டார். அத்துடன் மாதவி செய்த வேலையை சூர்யாவிற்கு தெரியப்படுத்தி மாதவியை அந்த குடும்பத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சதி பண்ணிய அர்ச்சனா மாதவியின் வீட்டுக்காரருக்கு கிப்டை அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த கிப்டை வாங்கிய நந்தினி, சூர்யாவிடம் கொடுக்கிறார். சூர்யா அதை ஓபன் பண்ணி பார்த்த நிலையில் கோட் டெண்டர் கைவிட்டு போனதற்கு மாமா தான் காரணம் என்று புரிந்து கொண்டு உச்சகட்ட கோபத்திற்கு போய்விட்டார். வீட்டுக்குள்ளே இருந்து கருப்பாடு மாதிரி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டு வெளியே போட்டு கொடுத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டதாக சூர்யா கோபப்பட்டு விட்டார்.

அத்துடன் அவர்களை வீட்டை விட்டு போக சொன்ன நிலையில் மாதவி அந்த நேரத்தில் ஒரு பிளான் பண்ணி சூர்யாவை நம்ப வைத்து விட்டார். அடுத்ததாக நந்தினி சாப்பிட்ட சாப்பாடு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் வாந்தி எடுத்த நிலையில் அங்கு வேலை பார்த்த சுந்தரம் இதை தவறாக புரிந்து கொண்டு சூர்யாவிடம் நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என்று சொல்லிவிட்டார்.

உடனே சூர்யாவின் அப்பாவும் சூர்யாவிடம் தனியாக கூப்பிட்டு கேட்ட நிலையில் இது நன்றாக இருக்கிறது, இதைப் பற்றி சொன்னால் நிச்சயம் அம்மா டென்ஷன் ஆவாங்க என்று யோசித்து சூர்யாவும் ஆமாம் என்று சொல்லி நந்தினி கர்ப்பம் என்று ஒரு டிராமா போட்டு விட்டார். இதை கேட்டு அதிர்ச்சியான சுந்தரவல்லி, நந்தினி வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த சமயத்தில் நந்தினி கர்ப்பம் என்றால் நிரந்தரமாக இந்த வீட்டிலே தங்கி விடுவாள், அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். ஆனால் சூர்யா மற்றும் நந்தினிக்கு தெரியும் இதெல்லாம் ஒன்னும் கிடையாது என்று. கடைசி வரை சூர்யா, அம்மாவை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு ஏற்ப நந்தினியை வைத்து புதுசாக ட்ராமா பண்ண ஆரம்பித்து விட்டார்.

Advertisement Amazon Prime Banner