திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட மதுபாலா.. கமெண்ட் செய்த ரசிகர்கள்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் தான் நடிகை மதுபாலா. 90களில் பிறந்தவர்கள் நடிகை மதுபாலாவை தெரியாமல் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த ஒரே நடிகை இவர்தான்.

இயக்குனர் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அழகன் படம் மூலமாகவே மதுபாலா முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மம்முட்டி, பானுப்ரியா மற்றும் கீதா ஆகியோருடன் இவர் நடித்திருந்தார். அடுத்ததாக 1992ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் “ரோஜா” படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் திடீரென கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு இவருக்குத் திருமணம் நடந்தது. இவர் நடிகை ஹேம மாலினியின் உறவினரான ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அமேயா, கீயா என்ற இரு பெண்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட மதுபாலா துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

madhoo
madhoo

இந்நிலையில் நடிகை மதுபாலா தனது மகள்களோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதை பார்த்த மதுபாலாவின் ரசிகர்கள், நம்ம 90’s நடிகை மதுபாலாவின் மகள்களா இது..?

இப்பொழுது மட்டும் மணிரத்தினம் ரோஜா படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் மதுபாலாவின் மகள்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Trending News