ஹிந்தி,தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாள மொழிகளில் முன்னணி கதாநாயகி தான் மதுபாலா. இவர் முதலில் மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார். மம்முட்டி, அர்ஜூன்,அக்ஷய் குமார், பிரபுதேவா,ஜிதேந்திரா, ஜாக்கி ஷெராஃப், கோவிந்தா,சயிஃப் அலிகான் என முன்னணி நடிகர்களுன் நடித்தார்.
அழகன்: 1991இல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அழகன் திரைப்படத்தில் மதுபாலா அறிமுகமானார். இப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா,கீதா என பலரும் நடித்திருந்தனர்.
வானமே எல்லை: 1992ல் கே பாலச்சந்தர் எழுதி,ராஜம் பாலச்சந்தர் இயக்கிய படம்தான் வானமே இல்லை. இப்படத்தில் ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், பானுப்பிரியா, மதுபாலா,பப்லு பிருத்திவிராஜ்,விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ரோஜா: ரோஜா திரைப்படம் மதுபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.மணிரத்தினம் இயக்கத்தில் 1992இல் ரோஜா திரைப்படம் வெளியானது. அதில் மதுபாலாவுக்கு ஜோடியாக அரவிந்த்சாமி நடித்திருந்தார். இப்படத்தின் பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இப்படத்தில் பாடல்கள் சிறந்த பாடல்களுக்கான பல விருதுகள் பெற்றது. ரோஜா திரைப்படம் சிறந்த படம் என தேசிய விருது பெற்றது.
ஜென்டில்மேன்: 1993இல் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா, கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
செந்தமிழ் செல்வன்: மனோஜ் குமார் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்த படம் செந்தமிழ்ச்செல்வன். இப்படத்தில் மதுபாலாக்கு ஜோடியாக பிரசாந்த் நடித்திருப்பார்.
மிஸ்டர் ரோமியோ: ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1996இல் மிஸ்டர் ரோமியோ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபுதேவா, ஷில்பா ஷெட்டி,மதுபாலா நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
பாஞ்சாலங்குறிச்சி: 1996 இல் இயக்குனர் சீமான் இயக்கிய திரைப்படம் பாஞ்சாலங்குறிச்சி. இப்படத்தில் பிரபு, மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.