Madurai based tamil movie list:மதுரை மாவட்டத்தின் பாரம்பரியமும் வட்டாரமொழியும் வித்தியாசமாக இருப்பதால் மதுரையைக் களமாக கொண்டு வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். “இந்த மண்ணு மணக்குற மல்லியப்பூ நம்ம மனசை எடுத்துச் சொல்லும்” என்ற கவிஞரின் பாடலுக்கிணங்க பாசக்கார மதுரை மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள்.
கில்லி: 2004 ல் தரணி இயக்கத்தில் விஜய்,திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்த கில்லி படத்தின் காட்சிகள் மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் மதுரை பேச்சு மொழியில் பின்னி பெடல் எடுத்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் “மதுர மல்லி மணக்குது சல்லி” ஆரம்பமே அமர்க்களமாக இருந்திருக்கும்.
காதல்: மதுரையில் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் அப்பாவி இளைஞனுக்கும் பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் ஏற்படும் பருவக் காதலை அழகாக சொல்லி இருக்கும் படம் “காதல்”. படம் முழுக்க கதாபாத்திரங்கள் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை கட்டி போட்டு இருந்தனர். “மதுரை ஜிகர்தண்டா” இப்படத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பேமஸ் ஆனது.
Also Read:விடாமல் ரஜினியை துரத்தும் பழைய வேதாளம்.. சூப்பர் ஸ்டாரா என கண்டம் விட்டு கண்டம் ஓடும் விஜய்
ரஜினி முருகன்: லிங்குசாமி தயாரிப்பில் பொன்ராம் இயக்கிய இப்படம், மதுரையின் ஒவ்வொரு இடங்களையும் மனதில் நிலைக்க செய்திருக்கும். சிவகார்த்திகேயன் மற்றும் சூரி அவர்கள் மதுரையின் பேச்சு மொழி வாயிலாகவே நகைச்சுவை ஒவ்வொன்றையும் வெளிப்படுத்தி ரசிகர்களை வயிறு குலுங்க வைத்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெறும் பஞ்சாயத்து காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகவும் மக்கள் இன்னமும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூறியிருந்தனர்.
கருப்பசாமி குத்தகைதாரர்: கரண் மற்றும் மீனாட்சி நடிப்பில் 2007 வெளிவந்த இப்படம், மதுரை சைக்கிள் ஸ்டாண்டில் ஆரம்பித்து மீனாட்சி சுந்தரேச திருக்கல்யாணம் வரை மதுரையின் நிகழ்வுகளை திருப்திகரமாக காட்டியிருந்தது. மதுரையில் வட்டிதொழில், ரவுடிசம் அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள் என ஒவ்வொன்றையும் தத்துரூபமாக காட்டியிருப்பார் இயக்குனர். திருடனாக வரும் வடிவேலு மதுரை வட்டார மொழியில் பல நகைச்சுவைகளை அள்ளிவிட்டு சென்றிருப்பார்.
சுப்ரமணியபுரம்: துரோகத்திற்கான தண்டனை மரணம் என்பதை கருவாகக் கொண்ட சசிகுமாரின் முதல் படமான சுப்பிரமணியபுரம். 80 களில் உள்ள காலகட்டத்தை அடிப்படையாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ளவாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மதுரையில் உள்ள கிராமங்கள்,தியேட்டர்,மக்களின் பேச்சு வழக்கு கோயில் திருவிழா என இப்படத்தில் எதையும் மிஸ் பண்ணாமல் அந்த காலத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருந்தனர்.
Also Read:4 படங்களில் ரஜினியுடன் கவுண்டமணி செய்த அலப்பறைகள்.. எஜமானுடன் தூக்கு சட்டிக்கு அலைந்த வெள்ளயங்கிரி