வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விருமன் கார்த்தி படமா இல்ல சூர்யா படமா.? மதுரையை திணறடித்த ரோலக்ஸ்

முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி போட்டிருக்கும் படம் விருமன். இப்படத்தில் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வருகின்ற 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

கிராமத்து சாயலில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் வேஷ்டி சட்டையில் வந்திருந்தனர். அதுவும் சூர்யா என்ட்ரி ஆன உடனே ரசிகர்கள் ரோலக்ஸ், ரோலக்ஸ் என ஆர்ப்பரித்தனர். மேலும் விருமன் படத்தின் நாயகன் கார்த்தியை விட சூர்யாவிற்கு தான் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனால் இப்படத்தின் ஹீரோ யார் என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர். அந்தளவுக்கு மதுரையை திணறடித்து இருந்தார் ரோலக்ஸ். அதுவும் சமீபத்தில் சூரரைப்போற்று படத்திற்காக சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மேலும் டில்லியை ரோலக்ஸ் என்ன பண்ணலாம் என சூர்யா ரசிகர்களிடம் வேடிக்கையாக கேட்டிருந்தார். ரசிகர்களுக்கு முன்னதாக முந்திக்கொண்ட கார்த்தி வீட்டிலேயே டில்லி, ரோலக்ஸ் இருவரும் நிறைய சண்டை போடுவோம் என்றார். ஆனால் சூர்யா, கார்த்தி இருவரும் ஒன்றாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோஷமிட்டனர்.

அதற்கு சூர்யா டில்லி, ரோலக்ஸ் கூட்டணியில் சீக்கிரம் ஒரு படம் வரும் என்பதை சொல்லி விட்டு சென்றிருக்கிறார். இதனால் மிக விரைவில் ஒரு தரமான சம்பவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது விருமன் படத்தின் டிரைலர் இணையத்தில் ட்ரண்டாகி உள்ளது.

Trending News