மலைபோல் நம்பி மண்ணை கவ்வியதா சர்க்கார் வாரி பட்டா.? மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் ஜோடி ஜெயித்ததா.?

தெலுங்கில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்த மகேஷ்பாபுவின் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் இன்று சர்க்கார் வாரி பட்டா படத்தை ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படி பல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்து வந்தனர்.

இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சிலர் இந்தப் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வந்தாலும், இப்படம் பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

படத்தின் முதல்பாதி பலரையும் கவர்ந்துள்ளது. அதேபோன்று தமனின் இசையில் மா மா மகேஷ் என்ற பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இப்படி முழு படத்தையும் மகேஷ் பாபு ஒருவர் தான் தாங்கி பிடித்து உள்ளார்.

அதிலும் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்து வருகிறது. இதுவும் இந்த படத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக சிலர் கூறுகின்றனர். வேறு ஹீரோயின் நடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

மேலும் தமனின் பின்னணி இசையும் ஓகே ரகமாக தான் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் மகேஷ்பாபு ஒருவரை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இப்படி படத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

படம் வெளிவருவதற்கு முன்பே ட்ரைலர் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் படம் சூப்பர்ஹிட் என்றும், ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்து என்றும் கூறுகின்றனர். மலைபோல நம்பி வெளியான இந்தப் படம் தற்போது மண்ணை கவ்வியுள்ளது.