வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

15 வினாடியில் மாயமான ஆடியோ லாஞ்ச் டிக்கெட்டுகள்.. சன் பிக்சர்ஸை நம்பாமல் தலைவராக ரஜினி செய்யும் வேலை

Actor Rajini: ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் வழங்கும் ஜெயிலர் பட ஆடியோ லான்சை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இலவசமாக ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்சன் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ஜாக்கி ஷெராப், சிவா ராஜ்குமார், தமன்னா, மோகன்லால் போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பெரிதளவு பார்க்கப்படுகிறது.

Also Read: எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்.. உங்க ஆட்டத்துல இது புது ரகமாக இருக்கு மில்லர்

மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதன் ஆடியோ லான்ச் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்தது. அதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ், இந்நிகழ்ச்சியை ஆயிரம் பேர் இலவசமாக பார்க்கலாம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தது.

அதன் புக்கிங் தொடங்கி சுமார் 15 வினாடிக்குள் டிக்கெட்டுகள் முடிந்து விட்டதாம். இது எப்படி நடந்தது பின்னாடி யார் இருக்கிறார் என்பது தெரியவில்லை. இவை கண்துடைப்பு நாடகமாய் அரங்கேறி உள்ளது. இதில் என்ன போர்ஜரி நடந்தது என்று தெரியவில்லை.

Also Read: ஹீரோயினை அடைய நினைத்த 60 வயது இயக்குனர்.. எதுவும் பண்ண முடியாததால் அசிங்கப்படுத்திய பப்ளி நடிகை.!

இதை அறிந்த சூப்பர் ஸ்டார் செய்வதறியாது, இனி சன் பிக்சர்ஸை நம்பினால் வேலைக்காகாது என ஒரு தலைவராய், எல்லா மாவட்டத்திலும் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்திற்கு தேவையான இலவச டிக்கெட்டை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். தன் நடிப்பில் வெளிவர இருக்கும் படத்தின் ஆடியோ லான்சை ஒட்டி இது போன்ற ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

மேலும் தன் ரசிகர்கள் நிறைய பேர் பார்க்கும்படி இலவச டிக்கெட்டுகளை மாவட்டம் வாரியாக அனுப்பி இருக்கிறார். இது போன்ற செயல்களால் தான் தலைவர், அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறார் எனவும் சினிமா வட்டாரங்கள் பெரிதாய் பேசி வருகிறது.

Also Read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

Trending News